கடந்த 2019 முதல் தென்மாவட்டத்தில் குறிப்பாக மதுரையில் பாஜகவினர் சில அதிரடி அரசியலில் ஈடுபட்டு தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறனர். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்கிற சர்ச்சை எழுந்த போது, அதை டெல்லியில் உள்ள பட்டியல் சமூக ஆணையத்திடம் புகார் தெரிவித்து விசாரணைக்கு வழிவகுத்து பஞ்சமி நில விவகாரத்தை தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தென்மாவட்டத்தை சேர்ந்த தமிழக பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன்.
தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதற்கு உதாரணமாக பாஜக தலைவர்கள் போன்றே தென் மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகளும் அதிரடி காட்டி வருகின்றனர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தேர்தல் பரப்புரையில் ஈடுபட தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகை தந்த போது தொடர்ந்து அவருக்கு எதிராக அந்தந்த பகுதியில் கருப்பு கொடி காட்டி பிரதமர் மோடியை வசைபாடி வந்தார் வைகோ.
அதே போன்று மதுரைக்கு பிரதமர் மோடி வருவதற்கு முன்பு மதுரை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர் வைகோவை கலங்கடிக்க செய்தது. அந்த போஸ்டரில் நாளை கருப்பு கொடி காட்ட வரும் வைகோ அவர்களை வரவேற்று வழியனுப்ப பாஜக இளைஞரணி வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறது என பாஜக இளைஞரணி மாநில செயலாளர் சங்கரபாண்டி அடித்து ஒட்டிய போஸ்டர் தான் தென்மாவட்ட பாஜகவின் அதிரடி அரசியலில் தொடக்க புள்ளி என்றே சொல்லலாம்.
இதனை தொடர்ந்து எதிர்கட்சி தலைவராக இருந்த முக ஸ்டாலின் மதுரை வந்த போது முரசொலி மூலபத்திரம் எங்கே என பதாகையை ஏந்தி சங்கரபாண்டி தலைமையில் முக ஸ்டாலின் வந்த வாகனத்தை மறைந்து கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போன்று நடிகர் கமல்ஹாசன் அரவங்குறிஞ்சி இடைதேர்தலின் போது “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. என்று குறிப்பிட்ட ஒரு மதத்தை சுட்டி காட்டி பேசியது இந்தியா முழுவதும் இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளப்பியது.
அரவங்குறிஞ்சி பிரச்சாரத்தை முடித்து அடுத்த நாள் திருப்பரங்குன்றம் இடைதேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த நடிகர் கமல்ஹாசன் மீது திருப்பரங்குன்றம் பாஜக மண்டல் தலைவர் வேல்முருகன் தலைமையில் கமல்ஹாசன் மீது செருப்பு வீசியதை தொடர்ந்து கூட்டத்தை ரத்து செய்துவிட்டு திரும்பினார் கமல்ஹாசன். இதே போன்று தொடர்ந்து பாஜக தலைவர்களை தரக்குறைவாக பேசிவந்த நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியகராஜனுக்கு பதிலடி தரும் விதத்தில் திருமாறன் ஜியை பேட்டி எடுத்து வெளியிட்ட மதுரையை சேர்ந்த பாஜக நிர்வாகி K.K என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அதிகாலை 4 மணிக்கு அவர் வீட்டுக்கு காவல் துறை வரும் அளவுக்கு PTR தியாகராஜனுக்கு தக்க பாடம் புகட்டும் அளவுக்கு அந்த வீடியோ அமைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மதுரை வந்துள்ள RSS தலைவர் மோகன் பகவத்தை தரக்குறைவாக பேசிய தல்லாகுளம் உதவி ஆணையரை தனிஒருவனாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் பாஜக இளைஞரணி நிர்வாகி பிராவின் ராஜ். தொடர்ந்து திமுகவுக்கு எதிராக மதுரையை சேர்ந்த பாஜகவினரின் அதிரடி அரசியல் தமிழகம் முழுவதும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமின்றி திமுகவினரை திணறடித்து தென்மாவட்டத்தில் பாஜக விஸ்வரூபம் எடுத்து வருவது குறிப்பிடதக்கது.