மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார், திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதிமுகவை மட்டும் கடுமையாக விமர்சனம் செய்து வருவது, திமுகவை பற்றி வாய் திறக்காமல் அமைதியாக இருந்து வருவது,திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை உறுதி செய்வது போன்று அமைந்துள்ளது.
புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல,தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். என தெரிவித்து எம்ஜிஆரை கையில் எடுத்துள்ள கமல்ஹாசன், இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை என்றும்,
தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு என தெரிவித்தவர், சமீபத்தில் அரசு அதிகாரியிடம் நடத்திய லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து கூறுகையில்,லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி.
நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான் கேட்பேன் என தெரிவித்துள்ளார், தொடர்ந்து அதிமுக அரசை விமர்சனம் செய்து வரும் கமல்ஹாசன் குறித்து அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்திய கூறுகையில்,உங்க உத்தமவில்லன் ஊத்திமூடின படம்னு ஊருக்கே தெரியும், பாத்துதான் தெரிஞ்சுகணும்னு அவசியமில்லை, அந்த மாறிதான் நீங்க டம்மியா முடிவு எடுக்க முடியாம அடிமை வேலை பாக்கற பிக்பாஸ்ம். vijay tvக்கு viewership ஏத்தறத விட்டுட்டு உங்களை நம்பி நாசமாபோன தயாரிப்பாளர்களை வாழவைக்கிற வழி பாருங்க என தெரிவித்துள்ளார்.