இதை முதலில் திருமாவளவன் செய்யட்டும்… தரமான சம்பவம் செய்த அண்ணாமலை..! இனிமேல் அம்பேத்கார் பற்றி வாய் திறப்பாரா திருமா.?

0
Follow on Google News

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தை பாஜக அவசர சட்டம் மூலமாக முறியடிக்கிறது. பாஜக அம்பேத்கார் நினைவு நாளை போற்றுவது வேதனையாக இருக்கின்றது என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. திருமாவளவன் போன்று அம்பேத்கர் அவர்களை வைத்து வியாபாரம் செய்யக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி கிடையாது.

அவர்களுக்கு அண்ணல் பி ஆர் அம்பேத்கார் என்பவர் வியாபாரப் பொருள் மட்டும் தான். பாரதிய ஜனதா கட்சி அப்படி இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன், அம்பேத்கர் அவர்கள் மத்திய பிரதேசத்தில் மாவோ என்கின்ற இடத்தில் பிறந்தார், லண்டனில் படித்தார், டெல்லியில் வாழ்ந்தார், நாசிக் என்ற இடத்தில் தான் கடைசியில் இறைவனடி சேர்ந்தார் . இந்த ஐந்து இடத்திலும் பஞ்ச தீர்த்தம் என்று சொல்கின்றோம்.

இந்த ஐந்து இடங்களில் முதல் முதலாக அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நினைவிடம் கட்டிய பெருமை பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் தான். லண்டனில் அம்பேத்கர் அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது இருந்த வீடு கடனில் இருந்த போது அந்த வீட்டை மீட்டு நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து பாஜக. அதையெல்லாம் தாண்டி எஸ்சி/எஸ்டி சட்டம் என்பது மிக முக்கியமான சட்டம். அந்த சட்டத்தில் காங்கிரஸ் அரசு செய்யாததை ஊர் கிணற்றில் தண்ணீர் எடுப்பதை தடை செய்தால் குற்றம் என்பது போன்று பாஜக மேலும் கூடுதலாக அந்த சட்டத்தில் இணைத்துள்ளது .

இதையெல்லாம் தாண்டி பட்டியல் சமூகத்தை சார்ந்த ராம்நாத் கோவிந்த் சிங் போன்ற அற்புதமான மனிதரை நாட்டின் குடியரசுத் தலைவராக அமர வைத்து அழகு பார்த்தது பாஜக. இது போன்று ஒவ்வொரு விஷயத்தையும் நாம் எடுத்துக்காட்டாக சொல்லிக் கொண்டிருக்க முடியும். அப்படி இருக்கும் பொழுது அம்பேத்கர் அவர்களை வைத்து வியாபாரம் மட்டும் செய்யக்கூடிய கட்சி திருமாவளவன் அவருடைய கட்சி.

குறிப்பாக ஜிஎஸ்டி சட்டத்தை பற்றியே தெரியாமல் ஐந்து வருடம் ஜிஎஸ்டி பற்றி பேசியவர் திருமாவளவன். ஆகையால் மறுபடியும் அவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறை முழுமையாக படித்துவிட்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை பற்றி குற்றம் சொல்ல வேண்டுமென்று நம்ம அண்ணன் திருமாவளவன் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.