சூர்யாவுக்கு எதிராக வன்னியர்களுடன் கை கோர்த்த கொங்கு வேளாளர்கள்.! சொந்த ஜாதியிலே கடும் எதிப்பு.. என்ன செய்ய போகிறார் சூர்யா..

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளதை தொடர்ந்து கொங்கு வேளாளர் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த பொங்கலூர் மணிகண்டன் தற்போது சூர்யாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார், அவர் இது குறித்து தெரிவித்ததாவது.

திரு.சூர்யா அவர்களுக்கு , வணக்கம் . நீங்களும் உங்கள் துணைவியாரும் சேர்ந்து தயாரித்த ஜெய் பீம் திரைப்படம் எங்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது . அந்தப் படத்தில் தமிழகத்தின் மிகப்பெரிய சாதியான வன்னியர் சாதியை இழிவு படுத்தும் காட்சிகளை நீங்கள் வைத்திருப்பதாக அந்த சாதி மக்கள் கருதுகிறார்கள் . அந்த சாதியின் முதன்மையான அடையாளமாக கருதப்படுகிற திரு . அன்பு மணி இராமதாசு அவர்கள் , ஜெய் பீம் படத்தில் உள்ள – வன்னியர் சாதி அடையாளங்கள் குறித்த , ஒன்பது கேள்விகளை கேட்டு இருந்தார் .

அந்த கேள்விகள் அனைத்தும் முழுக்க முழுக்க நியாயமான கேள்விகளாகவே எங்களுக்குத் தோன்றுகிறது . ஆனால் அதற்கு நீங்கள் அளித்துள்ள பதிலில் ஒரு துளியும் நேர்மையோ நியாயமோ இல்லை . அந்த பதிலில் உங்களுடைய ஆணவமே வெளிப்படுகிறது . இது நல்லதல்ல . ஆக அந்த படத்தில் உள்ள வன்னியர் வெறுப்பு காட்சிகள் அனைத்தும் உங்கள் சம்மதத்தோடு அல்லது உங்கள் விருப்பப்படி தான் படம் ஆக்கப்பட்டு இருக்கிறது என்பது உங்கள் பதிலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இது யாருக்கும் நல்லதல்ல .

நீங்கள் வேறு சாதியை அல்லது வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் , மொத்தமாக சாதிகள் அழிந்து விடாது . சாதி எப்போதும் இருந்தது – இப்போதும் இருக்கிறது – இனியும் இருக்கும் . ஒரு சில தனி நபர்களோ அல்லது ஒரு சிறு குழுவோ நினைப்பதால் சாதியை அழிக்க முடியாது . அது குறித்து நான் உங்களிடம் விவாதிக்க விரும்பவில்லை. இப்போது உள்ள சிக்கல் என்னவென்றால் , எங்கோ சென்னையில் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு உங்கள் ஆதாயத்திற்காக – உங்கள் எண்ணத்திற்காக நீங்கள் தயாரித்த ஒரு திரைப்படம் . கோடிக்கணக்கான மக்களை கொண்ட இரண்டு சாதியினர் இடையே கசப்பு உணர்வை ஏற்படுத்தி விடும் என்று நான் அஞ்சுகிறேன் .

ஏனெனில் வன்னியர் சாதி மக்கள் நீங்கள் என்ன சாதி என்று தேட ஆரம்பித்தால் அது எங்கள் கொங்கு வேளாளர் சாதியின் மீது கவனத்தை கொண்டு வந்து விட்டு விடும் . நீங்கள் சாதிப் பற்றாளரோ சாதி உணர்வாளரோ கிடையாது .அப்படி இருக்கும் போது , நீங்கள் செய்த செயலுக்கு எங்கள் சாதி மக்கள் ஏன் பலிகடா ஆக வேண்டும் ? ஆகவே நீங்கள் உங்கள் நிலையை – கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சாதிக்கும் உங்களுக்கும் உள்ள உறவை – பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள் . அது இரண்டு சாதி மக்களிடையே வெறுப்பு வளராமல் தடுக்கும் . அதுவே நீங்கள் பிறந்த சாதிக்கு செய்த உதவியாக இருக்கும்.

மீண்டும் படத்திற்கு வருகிறேன் . நீதியரசர் சந்துருவின் பெயரும் காவல்துறை தலைவர் பெருமாள் சாமியின் பெயரும் பாதிக்கப்பட்ட ராஜாக்கண்ணுவின் பெயரும் மாற்றப்படாமல் அப்படியே பயன்படுத்தப்படும் போது – தவறான மனிதரான அந்தோனி சாமியின் பெயர் மட்டும் குரு என மாற்றப்பட்டது ஏன் ? இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா ? திட்டமிட்ட சாதிய வன்மம் இல்லையா ? தங்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற ஆணவம் இல்லையா ? யோசியுங்கள் சூர்யா .

அந்தோணி சாமி என்ற பெயரை கேட்டாலே , அவர் கிறித்தவர் என்பது எல்லோருக்கும் விளங்கும் . ஆனால் அந்தோணி சாமியின் அறையில் வன்னியர் சாதியின் அடையாளம் கொண்ட அல்லது இந்து மதத்தின் அடையாளம் கொண்ட நாட்காட்டி மாட்டப்பட்டு இருப்பது ஏன் ? அங்கே ஏசு கிறித்து அல்லது மேரி மாதாவின் படம் கொண்ட நாட்காட்டி அல்லவா மாட்டப்பட்டு இருக்க வேண்டும் ? அப்படி காட்டாமல் தடுத்தது என்ன ? – தடுத்தது யார் ?

ராஜாக்கண்ணுவின் சிக்கலின் போது முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து அவருடைய மனைவிக்கு ஆதரவாக இருந்தது உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் ‌. ஆனால் உங்கள் படத்தில் அவரை நீங்கள் தவறான மனிதராக சித்தரித்து இருக்கிறீர்கள் . ஏன் ? அவர் வன்னியர் சாதி என்பதாலா ? இது அப்பட்டமான சாதி வன்மம் இல்லையா ? நீதியரசர் சந்துருவையும் காவல் துறை தலைவர் பெருமாள் சாமியையும் உயர்த்தி பிடித்த நீங்கள் , இந்த வழக்கிற்காக தன் சொத்துக்களை விற்று செலவு செய்த – வழக்கு முடியும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று வைராக்கியமாக இருந்த , கோவிந்த சாமியின் ஈகையை உயர்த்திப் பிடிக்காதது ஏன் ? அவர் வன்னியர் சாதியில் பிறந்தவர் என்பதாலா ?

வேண்டாம் சூர்யா . உங்கள் அழுக்குகளை கொட்டுவதற்கான குப்பைத் தொட்டியாக திரைப்படத்துறையைப் பயன்படுத்த வேண்டாம் . அது யாருக்கும் நல்லதல்ல , உங்களுக்கும் நல்லதல்ல . நன்கு சிந்தித்து நியாயமான நல்லதொரு அறிக்கையை வெளியிடுங்கள் . அது தான் எல்லோருக்கும் நல்லது . கொங்கு வேளாளர்கள் எப்போதும் அறத்தின் பக்கமே நியாயத்தின் பக்கமே நிற்போம். சாதிக்காக சூர்யா அல்ல, அறமற்ற செயல் செய்வோர் எவரையும் ஆதரிக்க மாட்டோம்.

தாமதமாக இந்தப் பதிவை வெளியிடக் காரணம், திரு.சூர்யா நீங்கள் எங்கள் மண்ணைச் சேர்ந்தவராதலால் ஒரு சமுதாயத்தின் வேதனையை உணருவீர்கள் என்று நம்பினேன். தவறு என்றால் திருத்திக் கொள்வீர்கள் என்றும் நம்பினேன். நீங்கள் செய்கிற சமூக சேவை உள்ளிட்ட அனைத்தின் வேஷமும் கலைந்து விட்டது. காலம் உங்களுக்கு உரிய பாடம் கற்பிக்கும். பொறுத்திருங்கள் சூர்யா. ஒரு சாதாரணக் கூத்தாடி என்பதை நிரூபித்து விட்டீர்கள். அதன் பலனை அறுவடை செய்வீர்கள். நன்றி . வணக்கம் . கொங்கு சொந்தங்களின் கடும் கண்டனப்பதிவு இது. என பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.