திமுக தொடங்கப்பட்ட காலம் தொடங்கி தமிழக முன்னால் முதல்வர் காமராஜர் முதல் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரை திமுகவினர் தொடர்ந்து அநாகரிகமான முறையில் விமர்சனம் செய்துவருவது தொடர்கிறது. விருதுபட்டியில் கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான், இந்த காமராஜன்’ என்று, ஒன்பது ஆண்டு, பொற்கால ஆட்சி தந்த காமராஜரை அவமானபடுத்தி ஒருமையில் அரசியல் நாகரிகமற்ற முறையில் பேசியவர் முன்னால் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி.
துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை, அவர் தாய் துறந்து விட்டதை போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காக, துறந்து விட்டு நிற்கிறேன்’ என்று, மூத்த எழுத்தாளர் சாவியிடம், கண்கலங்கிய காமராஜரின் தாய் சிவகாமியைத் தான், “கருவாட்டுக்காரி’ என்று, கரித்துக் கொட்டினார், கருணாநிதி.அதே போன்று காவல் துறையில் உயரிய பதவியான ஐபிஸ் அதிகாரத்தை துறந்து நாட்டுக்காக அரசியலில் தன்னை அர்ப்பணித்து கொண்ட அண்ணாமலை திமுகவின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
திருமணம் வேண்டாம் என்று திகழ்ந்த காமராஜருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை’ என பேசிய கருணாநிதி. காமராஜர் என்ன மெத்த படித்தவரா? முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான், இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று, எருமையையே அனுப்பியுள்ளது’ என, காமராஜர், ரஷ்யா சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அநாகரிகமாக பேசிய கருணாநிதி. ஐதராபாத் ஸ்டேட் பாங்கிலும், சுவிஸ் வங்கியிலும், பல கோடி ரூபாய், டெபாசிட் செய்துள்ளார் காமராஜர் என பொய் குற்றசாட்டுகளை முன் வைத்தார் கருணாநிதி.
அதற்கு, அந்த கணக்கோட செக் புக்கை, கருணாநிதி கொண்டு வந்தால், கையெழுத்து போட்டு தருகிறேன்; அவரே எல்லா பணத்தையும் எடுத்துக் கொள்ளட்டும்’ என, நாகரிகத்தோடும், பண்பாட்டோடும் பதிலளித்தார் காமராஜர், அந்த வரிசையில் தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை தனது சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருவதும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்த வருவதை ஆட்டு புழுக்கை அண்ணாமலை, ஆட்டு குட்டி அண்ணாமலை என்று திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது குறித்து ஒரு கூட்டத்தில் விளக்கம் அளித்த அண்ணாமலை, என்னை ஆட்டுப்புழுக்கை என்று திமுகவினர் அழைப்பதை நான் கேவலமாக கருத வில்லை, எனது தாய், தந்தை ஆடு வளர்த்து, ஆட்டு புழுக்கையை அள்ளிப்போட்டு தான் என்னை படிக்க வைத்தார்கள், இன்று காலை கூட நான் ஆட்டு புழுக்கையை அள்ளிப்போட்டு தான் இங்கே வந்துள்ளேன் என காமராஜர் பாணியில் தன்னை விமர்சனம் செய்யும் திமுகவினருக்கு நாகரிகமான முறையில் பதிலளித்தார்.
இந்நிலையில் தொடர்ந்து திமுக குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் தொலைக்காட்சிகளில் அண்ணாமலை பற்றி செய்தி வெளியிடும் போது அவர் ஆட்டு குட்டிகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு செய்தி வெளியிடுவதர்க்கு, ஆட்டு குட்டி மேய்ப்பது, கருவாடு விற்பது என்ன கேவலமா என்று மக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடதக்கது, காலங்கள் மாறினாலும் காமராஜர் முதல் அண்ணாமலை வரை திமுகவின் அநாகரிக விமர்சனம் மாறவில்லை என மக்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.