ஹெராயின் கடத்தலில் மோடிக்கு தொடர்பா.? பொய் செய்தி வெளியிட்ட கலைஞர் செய்திக்கு ஆப்பு.. பாஜக அதிரடி..

0
Follow on Google News

அதானியின் துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்புள்ள கேராயின் பறிமுதல்… மோடியின் தயவுடன் போதை பொருள் கடத்தல் என்கிற தலைப்பில் கலைஞர் செய்திகள் சமீபத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த செய்தி உண்மை இல்லை என தெரிந்தும் கூட பிரதமர் மோடி துணையுடன் போதை பொருள் கடத்தல் நடைபெறுவதாக சமூக வலைத்தளத்தில் விஷமிகள் சிலர் திட்டமிட்டு பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பரப்பி வந்தனர்.

இந்நிலையில் இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜக பொருளாளர் SR சேகர், பொய் செய்தியை வெளியிட்ட கலைஞர் செய்தி மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் புகார் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கலைஞர் செய்திகள் என்கின்ற தொலைக்காட்சியில் ட்விட்டர் பக்கத்தில் அதானியின் துறைமுகத்தில் ரூபாய் 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் மோடியின் தயவுடன் போதைப்பொருள் கடத்தல்? என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த பதிவு உண்மைக்குப் புறம்பானது அவதூறானது பாரத பிரதமர் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு புனையப்பட்ட செய்தியாகும். மேற்கண்ட ட்விட்டர் பதிவில் எந்த உண்மையோ , ஆதாரமோ இல்லை என்பதை தெரிந்தே மேற்கண்ட தொலைக்காட்சியினர் பிரதமருடைய புகழுக்கும் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு தவறான எண்ணத்தில் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாக moneycontrol.com என்கின்ற டிஜிட்டல் பத்திரிகையில் வந்திருக்கின்ற செய்தியின் சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

செப்டம்பர் 13-ஆம் தேதி சந்தேகத்திற்குரிய இரண்டு கன்டெய்னர்களை DRI துறையினர் பறிமுதல் செய்து சோதனை நடத்தியதில் 2998 கிலோ ஹெராயின் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது. மேற்கண்ட விசாரணையில் டெல்லி, விஜயவாடா, சென்னை நகரங்களில் விசாரிக்கப்பட்டு, மேலும் 10 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட 8 பேர் ( 4 பேர் ஆப்கானிஸ்தான், 1 உஸ்பெகிஸ்தான் 3 இந்தியர் மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

நாட்டின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூட குறிப்பாக யார் மீதும் குற்றம் சாட்டாமல் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்லி உள்ள நிலையில் மேற்படி தொலைக்காட்சியில் உள்நோக்கத்தோடு பிரதமர் மீது அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கில் செய்தி வெளியிட்டிருக்கிறது தெளிவாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட அதானி என்பவருக்கு சொந்தமான முந்தரா துறைமுகத்தின் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் எங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்று விளக்கம் அளித்த பிறகும் கூட,

இதிலே பிரதமருக்கு தொடர்பு இருக்கிறது என்று தொலைக்காட்சியில் வெளியிட்டிருக்கிறது. எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என SR சேகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் கவனத்துக்கு தமிழக பாஜகவினர் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் கலைஞர் செய்திக்கு சட்ட நடவடிக்கை மூலம் ஆப்பு விழும் என தெரிகிறது.