சமீபத்தில் தமிழக பாஜக முக்கிய தலைவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் யூ டுயூபர் மதன் ரவி சந்திரன், இவரின் கடந்த கால நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்த வந்தால் தெரியும், இவர் ஒருவருக்கு எதிராக விமர்சனம் அல்லது அவதூறுகளை பரப்பும் போது, அந்த விமர்சனத்துடன் ஒரு தரப்பு ஆதரவையும் பெறுபவதர்க்கு சதுர்த்தியமாக பேசி முயற்சி செய்வார்.
இப்படி தான் பெரியார் புகைப்படம் அச்சடிக்கப்பட்ட டீ-சர்ட் அணிந்து உலா வந்து திராவிட சிந்தாந்தம் தொடர்புடைய நிறுவனத்தில் பணியில் இருந்தவர் அங்கே இருந்து துரத்தியடிக்கப்பட்ட பின் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவை எதிர்த்து பிரபலம் அடைய முயற்சித்தவர், அப்போது திமுகவை கடுமையாக எதிர்த்த இந்துத்துவ ஆதரவாளர்கள் மற்றும் பாஜக,அதிமுகவினர் ஆதரவை பெற முயற்சித்தார் அதில் வெற்றியும் கண்ட மதன் சில காலம் இப்படியே தனது காலத்தை ஓட்டினார்.
இந்நிலையில் தற்போது பாஜக முக்கிய தலைவர் குறித்து சர்ச்சை கூறிய வீடியோ வெளியிட்ட மதன், இதில் சிறிதும் தொடர்பில்லாத சிறுபான்மையினர் கவனத்துக்கு என்று அவர்கள் ஆதரவை பெற முயற்சிக்கிறார், மேலும் இந்த வீடியோ வெளியிட்டால் தனக்கு இதுவரை ஆதரவளித்து வந்த பாஜகவினர் தனக்கு எதிராக விமர்சனம் வைக்க கூடும் என்பதால், சதுர்த்தியமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் இந்த வீடியோவை வெளியிட சொன்னது போன்று ஒரு தோற்றத்தை அவர் பேசிய அந்த வீடியோவில் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோவை அண்ணாமலை வெளியிட சொன்னாரா.? என்கிற குழப்பம் அந்த வீடியோவை பார்த்த பாஜகவினர் மத்தியில் நிலவி வந்த நிலையில், பாஜகவை சேர்ந்த சிலர், மாநில தலைவர் அண்ணாமலை சொல்லிவிட்டார் என்று, மதனின் இந்த செயலுக்கு சிலர் தொடக்கத்தில் ஆதரவளித்தனர், ஆனால் சர்ச்சைக்குரிய அந்த வீடியோ வெளியான அன்று மதியம் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கைக்கு பின்பு தான் குழப்பத்தில் இருந்த பாஜகவினர் மட்டுமில்ல அனைவருக்குமே மதனின் தில்லாலங்கடி பற்றிய உண்மை தெரியவந்தது.
அதில் மதன் வீடியோ பதிவுகளை வெளியிடப் போவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார். முன்னர் இரண்டு முறை நேரில் சந்தித்தபோது நான் கூறியபடி குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல், நடவடிக்கை எடுக்க முடியாது என்ற என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில் செய்து கொள்ளுங்கள்” என்று சுருக்கமாக முடித்து விட்டேன் என அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்,அனால் இதை அண்ணாமலை தான் இந்த வீடியோவை வெளியிட சொன்னதாக ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி கையும் களவுமாக மாட்டி கொண்டார் மதன் ரவிச்சந்திரன்.