பாஜக கையில் இருக்கும் வேல் ஆயுதமா.? RK ராதாகிருஷ்ணன் கேள்விக்கு பேராசிரியர் பதிலடி.! அனல் பறந்த விவாத வீடியோ உள்ளே…

0
Follow on Google News

தனியார் தொலைக்காட்சியில் பீகார் தேர்தல் குறித்து நடந்த விவாத நிகழ்ச்சியில், பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் மற்றும் பத்திரிகையாளர் RK ராதாகிருஷ்ணன் இடையே நடந்த விவாதம் அனல் பறந்தது.பீகார் தேர்தலில் மதங்கள் குறித்து, ராமஜென்ம குறித்து, மற்றும் தேசபக்தி குறித்தும் பாஜகவினர் பேசியதாக RK ராதாகிருஷ்ணன் பேசியது குறித்து நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர்.இராம.ஸ்ரீநிவாசன்.

இந்த தேசத்தின் தாரக மாத்திரமே தேச பக்தி, அப்படியிருக்கையில் தேச பக்தி குறித்து பேசாமல் வேறு எதை பற்றி பேசுவது.? எனகேள்வி எழுப்பிய பேராசிரியர், பாரதிய ஜனதா கட்சி தேச பக்தி குறித்து பேசினால் பதிலுக்கு காங்கிரஸ் கட்சியும் பாஜகவை விட கூடுதலாக தேசபக்தி குறித்து பேசலாமே. நங்கள் பாரத் மாதா கி ஜே என்கிறோம், ஆனால் காங்கிரஸ் கட்சியினர் சோனியா அன்னைக்கு ஜே என்கிறார்கள் அப்படியானால் மக்கள் யாரை ஏற்று கொள்வார்கள்.?

மேலும் தொடர்ந்து பேசிய பேராசிரியர், இந்திய அன்னை வாழ்க.! என்கிற வார்த்தையை பாஜகவுக்கு பட்டா போட்டு கொடுத்தது RK ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் தான், ஜெய்கிந்த், வந்தே மாதரம் என்று சொன்னால் நீங்க பாஜகவா என கேள்வி எழுப்புகின்றனர், அதே மாதிரி, பட்டேல், சுவாமி விவேகானந்தர் பற்றி பேசினால் நீங்க பாஜகவா என கேட்கிறார்கள்.? இப்படி அனைத்து தேசிய அடையாளங்களையும் பாஜக சொந்தம் கொண்டாடுவது என்கிற நிலையை உருவாக்கியது எதிர்க்கட்சிகள் தான் என பேராசியர் பேசினார்.

இந்நிலையில் வேல் ஒரு ஆயுதம் அதை கையில் எடுத்துக்கொண்டு ஒரு அரசியல் கட்சி பயணம் செய்வதாக RK ராதாகிருஷ்ணன் பாஜக நடத்தும் வேல் யாத்திரை குறித்து பேசியதற்கு பதிலளித்த பேராசிரியர், அப்படியானால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் அருவா சுத்தியல், அதில் அருவா ஒரு ஆயுதம் அப்படியானால் அந்த சின்னத்தை தடை செய்யலாமா.? என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் பதிலளித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.