காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத ஆண்டுகளுக்கு சுயஇன்பம் ஒன்றே தீர்வாக உள்ளது. தினம் தோறும் வாலிப வயதுடைய இளைஞர்கள் சுயஇன்பத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். டிவி மற்றும் செல்போன்களில் வெளிவரும் ஆபாச படங்களை பார்த்துவிட்டு உணர்ச்சிகளை சுயஇன்பம் மூலம் தீர்த்துக் கொள்கிறார்கள். வாலிப வயதில் தான் தொடங்குகிறது இந்த சுயஇன்பம், சிலருக்கு திருமணத்துக்குப் பிறகு நிறுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் சிலர் இதற்கு அடிமையாகி திருமணத்திற்கு பிறகும் இதில் ஈடுபடுகின்றார்கள். சுய இன்பத்தில் ஈடுபடும்வரை மனம் நன்றாக தான் இருக்கிறது ஆனால் முடிவில் ஏதோ குற்றம் செய்தது போன்ற உணவுகள் ஏற்படுகிறது. பெண்களும் சிலர் சுய இன்பத்தில் ஈடுபட தான் செய்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு இதுபோன்ற குற்ற உணர்வுகள் தோன்றவில்லை, பெரும்பாலும் இந்த குற்ற உணர்வு ஆண்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது.
பெரும்பாலான மருத்துவர்கள் சுய இன்பம் செய்வது எந்த தவறும் இல்லை இதனால் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அறிவுரை கூறி வந்தாலும், ஒரு சில மருத்துவர்கள் சுயஇன்பம் செய்வதால் உங்களுடைய இல்லற வாழ்க்கையில் உங்கள் மனைவியை திருப்தி படுத்த முடியாது, நரம்பு, ஆண்மை இன்மை குறைவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று இவர்கள் கூறுவதை கேட்டு மீண்டும் மன உளைச்சலுக்கு செல்கிறார்கள். சுயஇன்பம் செய்வது சரியா? தவறா? என்பதை விட “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்” என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளவது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்த வழி என்கின்றனர் கோவையை சேர்ந்த பிரபல மருத்துவர்.