தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்த தமிழகத்தின் KGF நாயகன்…

0
Follow on Google News

தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை என்றழைக்கப்படும் இவர்தான் தற்போது தமிழகத்தின் கேஜிஎப் நாயகனாக உருவெடுத்துள்ளார், அவர்தான் ஹரி நாடார். இவரது உடம்பின் நகைகள் நடமாடாத இடமே கிடையாது. ஹரி நாடார் தமிழகத்திலுள்ள பனங்காட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்த ஹரிநாடார் அதிமுகவே அதிர்ச்சியில் உள்ளக்கியவர்.

தன் சமூக முன்னேற்றத்திற்காக இவரும் ராக்கெட் ராஜாவும் சேர்ந்து தொடங்கப்பட்ட கட்சிதான் பனங்காட்டு மக்கள் கட்சி. நடிகை விஜயலட்சுமியை ஹரி நாடார் விமர்சனம் செய்ததில், அவர் தற்கொலைக்கு முயற்சித்ததால் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்ட போது துப்பாக்கி வைத்திருந்தால் காவல் நிலையம் வரை சென்று பிரபலமானார்.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு பெயர் போன ஸ்ரீரெட்டியுடன் டிக் டாக்கில் நெருக்கமாக அமர்ந்து இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் தான் தயாரிப்பில் “2கே காதல் அழகானது” என்ற படத்தின் பூமி பூஜைக்கு கேஜிஎப் நாயகன் யாஷ் போன்று “கோட் சூட்” அணிந்து நடமாடும் நகைக்கடையுடன் புல்லட்டில் வலம் வந்தார் ஹரி நாடார். இந்தத் திரைப்படத்தில் ஹரிநாடார் மற்றும் வனிதா இணைந்து நடிக்கின்றனர்.

இப்படி சர்ச்சைகளுக்கும், வைரல் களுக்கும் பேர்போன ஹரி நாடார் திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை பகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல் காந்தியிடம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மூன்று மொழிகளில் கோரிக்கை வைத்தார். நடமாடும் நகைக்கடையுடன் மூன்று மொழிகளில் கோரிக்கை வைத்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார் ராகுல் காந்தி. பொதுவாக அரசியல் வாதிகள் தான் பிரச்சாரத்திற்கு செல்லும் போது மக்களை கவர்வதற்கு அவர்கள் மொழிகள் மாற்றி பேசுவார்கள். ஆனால் தற்போது, ஹரி நாடாரை கண்டு அதிர்ச்சியில் ராகுல் காந்தி வைரலாகும் வீடியோ.