காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே கிடையாதா.? பெரும் சர்ச்சையில் சிக்கிய உதயநிதி வெளியிட்ட இந்திய வரைபடம்.!

0
Follow on Google News

பாக்கிஸ்தான் விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது திமுக. கடந்த ஆண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது, ஆங்கில ஊடகத்தில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்குபெற்ற திமுக செய்தி தொடர்பாளர் சரவணன், இந்தியாவின் ஒரு பகுதியே கிடையாது காஷ்மீர் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, திமுக செய்திதொடர்பாளர் சரவணன் பாக்கிஸ்தான் ஆதரவாளர் போன்று பேசுவதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் அந்த விவாத நிகழ்ச்சியில் இந்தியாவின் ஒரு பகுதியே கிடையாது காஷ்மீர் என சரவணன் பேசியதும். குறுக்கே மறித்து நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூற முடியாமல் திணறிய திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் நிகழ்ச்சியின் பாதியிலே வெளியேறினார், இதனை தொடர்ந்து தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்திய வரைபடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தனது டிவீட்டர் பக்கத்தில் வீடியோ ஓன்று வெளியிட்டுள்ளார், அதில் இந்திய வரைபடத்தில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியை காணவில்லை, தொடர்ந்து காஷ்மீரில் உள்ள ஒரு பகுதியை பாக்கிஸ்தான் உரிமை கோரி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலில் வெளியிட்டுள்ள இந்திய வரைபடம் பாக்கிஸ்தானுக்கு ஆதரவு தரும் விதத்தில் அமைந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.