கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். கமல்ஹாசன் அரசியலை விட்டு விலகப் போவதாக வெளியான வதந்திகளுக்கு மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசன் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றியதை அடுத்து மருத்துவமனையில் சோதனை செய்துகொண்டதில் தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர் கடந்த வாரம் முழுவதும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். சிகிச்சையில் முழுவதும் குணமான அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் கமல்ஹாசன் அரசியலை விட்டு விலகப் போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த தகவலுக்கு இப்போது மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.
அதில் ‘ கமல்ஹாசன் தான் உயிரோடு இருக்கும்வரை அரசியலிலும், அரசியல் இருக்கும்வரை மநீம இருக்கும் என்பதை ஏற்கனவே தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கட்சி தொடங்கியபோது, தன் வாழ்நாள் முழுவதும் அரசியலில் சேவையாற்றிடுவேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் வகுத்த அந்த கொள்கையின்படி இப்போதும் செயல்பட்டு வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.