தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்க காரணம், ஆரம்பத்திலே தமிழக அரசு முறையாக கட்டுப்படுத்த தவறியது தான் என்றும், தேர்தல் முடிந்ததும் திமுக தான் ஆட்சி அமைக்க போவது என்று நன்கு அறிந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னெச்சரிக்கையாக முன் கூட்டியே நடவடிக்கை எடுக்காததும் காரணம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, கொரோனா இரண்டாம் அலை மிக தீவீரமாக பரவிய நிலையில், கடந்த ஏப்ரல் 6 தேதி தேர்தல் முடிந்த அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருக்க வேண்டும், ஊரடங்கு உத்தரவை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என மத்திய அரசு அதிகாரம் வழங்கிய நிலையில் முன்கூட்டியே ஊரடங்கு உத்தரவை அமல் படுத்திய கர்நாடக அரசு போன்று தமிழக அரசும் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு அமல் படுத்தியிருக்க வேண்டும்.
தேர்தல் முடிந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 300 என்ற குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இருந்தது, தேர்தல் முடிந்த அடுத்த இரண்டு நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு வாக்கு எண்ணிக்கைக்கு சில நாட்களுக்கு முன் ஏப்ரல் 30 தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தால் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும், ஆனால் ஆட்சிக்கு வருவோம் என தெரிந்த முதல்வர் முக ஸ்டாலின், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விடுத்து மே 2ம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவுக்கு அவசியம் இருக்காது என அலட்சியமாக தெரிவித்திருந்தார்.
மேலும் தேர்தல் முடிந்ததும் கொரோனா இரண்டாம் அலை பற்றி கருத்தில் கொள்ளாமல், வாக்கு பேட்டி இயந்திரம் இருக்கும் அறையின் அருகில் இருக்கும் வீடுகளில் டிஷ் ஆண்டனா இருக்க கூடாது, கண்டைனர் லாரிகளை துரத்துவது, கழிப்பறை வாகனம் வாக்கு என்னும் மையம் அருகில் நிறுத்த கூடாது, போன்று தேவையற்ற செயல்களில் திமுக தலைமை ஈடுபட்டு, மக்களை திசை திருப்பி கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் செய்து விட்டது.
அதே போன்று தற்போது ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசு அமல் படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவு, ஊரடங்கு மாதிரியே இல்லை. ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டு கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படி படியாக ஊரடங்கு உத்தரவை குறைக்க வேண்டும், ஆனால் திமுக அரசு இதை தலைகீழாக செய்து வருகிறது ஊரடங்கு உதவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கழித்து தற்போது கடுமையாக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் அஃசிஜன் பறக்குறையை போக்க அஃசிஜன் தேவையை கட்டுக்குள் கொண்டு வர கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை குறைக்க மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பேராசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.