நாளுக்கு நாள் கொரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில், வரும் சட்டசபை தேர்தல் நடைபெறுமா என்கிற சந்தேகம் பல்வேறு தரப்பில் இருந்து எழுந்து வருகிறது, வரும் ஏப்ரல் முதல தேதி வரை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து, கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால், வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன் தமிழக சட்டசபை தேர்தல் ரத்து செய்யப்பட்டு, தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படலாம் என ஆருடம் கூறப்பட்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் ரத்து குறித்து திட்டவட்டமாக மறுத்து உள்ளது, திட்டமிட்டபடி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளது, இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதில் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோன தொற்று காரணமாக தேர்தல் ரத்து செய்யப்படலாமா.? என ஆலோசனை நடந்துள்ளது. அப்போது இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் முதன்மை மாநிலக்களில் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்கள் முன்னிலை வகித்து வருகிறது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா முதல் இடத்திலும், அடுத்தடுத்து பஞ்சாப்,குஜராத், மற்றும் மற்ற மாநிலங்கள் இடப்பெற்று வருகிறது.
இதில் மற்ற மாநிலக்களில் ஒப்பிடும் போதும் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது, மேலும் தேர்தலை ரத்து செய்வதை விட பாதுகாப்பாக தேர்தல் நடத்துவது பற்றி டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது, அதில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கு கையுறை இலவசமாக வழங்குவது, முக கவசம் கட்டாயம், தேர்தல் அலுவலக நுழைவு வாயிலில் சானிடைசர், என தேர்தலை பாதுகாப்புடன் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.
இந்த ஆலோசனைக்கு பின்பு தான் தமிழக தேர்தல் ரத்து செய்யப்படாது என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.இந்நிலையில் தேர்தல் ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் முக குறைவாக இருப்பதாகவே கருத படுகிறது, இதனால் தேர்தல் ரத்து செய்து விடுவார்கள் என குழப்பத்தில் இருந்த வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் அறிவிப்புக்கு பின் தீவிர வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளது குறிப்படத்தக்கது.