நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்தேர்வை நீக்கி விடுவோம் என்றார்கள் தி.மு.க.வினர். சூடு, சுரணை இருந்தால் நீட் தேர்வை தி.மு.க. ரத்து செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி உள்ளார். மேலும் அவர் பேசியதாவது, நீட் தேவையில்லை என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. உச்சநீதிமன்ற உத்தரவுபடி மாநில அரசு செயல்பட்டு வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நீக்கி விடுவோம் என்ற தி.மு.க.வுக்கு சூடு சுரணை இருந்தால் நீட்டை நீக்கி இருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை நீக்கவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தி.மு.க அரசு குழப்பி வருகிறது.
தகுதியான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க இருக்கிறது. யாருடைய தயவிலும் அ.தி.மு.க இல்லை ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அ.தி.மு.க அரசு செய்தது. 550 மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவம் படிக்க முடியும். உச்சநீதிமன்றத்தில் வழக்காடி நிவாரணம் தேடுவது அல்லது டெல்லியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் போராடி தீர்வு காணலாம். இருப்பதையும் கெடுப்பதை தான் திமுக அரசு எடுத்து வருகிறது.
7.5 சதவீத இடஒதுக்கீடு கெடுகின்ற வகையிலும் கிராமப்புற மாணவர்களின் கல்வியை கெடுக்கின்ற வகையில் தி.மு.க அரசு ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வை மத்திய அரசை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் திரும்ப பெற வேண்டும். 2006-ல் போட்டி தேர்வை திமுக ரத்து செய்தது. 2007-2016 வரை 10 ஆண்டு காலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் போட்டி தேர்வு இல்லாமல் வெறும் 74பேர் மருத்துவ கல்வி பயின்றுள்ளனர். ஒரு சதவீதத்திற்கு கீழே தான் சேர்ந்துள்ளனர்.2018-2020 வரை அரசு பள்ளி மாணவர்கள் 9 பேர் சேர்ந்துள்ளனர்.
நீட் தேர்வு வேண்டாம் என்ற எண்ணத்தோடு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிராமப்புற மாணவர்களின் நலனை காக்கவும், அவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினார். இதன் காரணமாக 450 மாணவர்கள் மருத்துவ படிப்பை பயின்றுள்ளனர். நீட் தேர்வு வந்த பின்பும் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. நீட் வந்ததால் தான் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிந்தது. இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.