நரேந்திர மோடி ஆட்சியில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையல்ல.! எல்.முருகன் பெருமிதம்.!

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துக்கள் செய்தியில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும், எனது முதற்கண் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பதற்கேற்ப, இயற்கையை வணங்கி, விவசாயத்தில் பெரும்பங்கு வகிக்கும் மாடுகள், விவசாய கருவிகள் என அனைத்திற்கும் நன்றி தெரிவித்து , அவைகளை கொண்டாடும் பண்பு மிக்க பாரம்பரியம் நமது தமிழர் பாரம்பரியம். இது உலகில் வேறெங்கும் இல்லை.

இந்த உன்னதமான கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் போற்றி, பாதுகாத்து, வருகின்ற தலைமுறைகளிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. எட்டுத் திக்கும் தமிழின் மாண்பையும், தமிழ் கலாசாரத்தின் மேன்மையையும் பறைசாற்றிக் கொண்டிருக்கும், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உற்ற நண்பன், நமது பாரதப் பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில், அனைவரும் இணைந்து, அனைவருக்கும் வளர்ச்சி என பயணிக்கும் ஆட்சியில், தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையல்ல.

தைத்திருநாளாம் பொங்கலில், தமிழ் செழிக்கட்டும், தமிழர் வாழ்வு உயரட்டும், தமிழகம் தரணியின் தலைமையேற்கட்டும். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும், எனது சார்பிலும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனதமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.