அய்யோயோ..போச்சே..! மூவாயிரம் ரூபாய் போச்சே..!மாஸ்டர் படம் பார்த்து கதறும் ரசிகர்கள்.! படம் எப்படி இருக்கு தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் , நடிகை மாளவிகா மோகன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சாந்தனு ஆகியோர் நடிப்பில், இசை அமைப்பாளர் அனிருத் இசையில் திரைக்கு வந்துள்ள படம் மாஸ்டர், இந்த படம் அணைத்து பணிகளும் முடிந்து திரைக்கு வர தயாராக இருந்த நிலையில் கொரோன தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டதால் மாஸ்டர் படம் திரைக்கு வருவதில் தடை ஏற்பட்டது.

ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய உடனே விநியோக உரிமையை விற்று பணம் பார்த்துவிட்டார் இந்த படத்தின் தயாரிப்பாளர், இதனை தொடர்ந்து படத்தை விலைக்கு வாங்கிய விநியோகஸ்தர்கள் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் பணத்தை திரும்ப கேட்டு, மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரை தொந்தரவு செய்ய தொடங்கினர், ஒரு கட்டத்தில் படத்தை வெளியிட வேண்டும் அல்லது பணத்தை விநியோகஸ்தர்களுக்கு திரும்ப தரவேண்டும் என்கிற சூழலுக்கு விஜய் மற்றும் தயாரிப்பாளர் தள்ளப்பட்ட நிலையில் வேறு வழியின்றி பொங்கல் வெளியீடாக படம் இன்று திரைக்கு வந்தது.

இந்நிலையில் பெரும் எதிர்பாப்புடன் படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சியது என கருத்து தெரிவித்து வருகின்றனர், சுமார் 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை டிக்கெட் எடுத்து, முதல் காட்சி சென்று மாஸ்டர் படம் பார்த்து வெளியே வந்த ரசிகர்களிடம் கருத்து கேட்ட போது, மூவாயிரம் கொடுத்து டிக்கெட் எடுத்து படம் பார்க்க சென்று பணத்தை வீணடித்து விட்டதாக புலம்பும் ரசிகர்கள், படத்தில் சொல்லும்படி ஏதும் இல்லை என்கின்றனர்.

ஆனால் சமூக வலைதளத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் பிரசாந்த், மாஸ்டர் படத்துக்கு 70/100 மார்க் போட்டுள்ளார், ஆனால் அவருடைய மதிப்பீட்டுக்கு ஆதரவாக ஒரு சிலர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளார், எதிராக அதிக நபர்கள் கருத்து தெரிவித்துள்ளதால், மாஸ்டர் படம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்றே சினிமா விமர்சகர்கள் மதிப்பீடு செய்கின்றனர், மேலும் பல செய்தி நிறுவனங்கள் மாஸ்டர் படம் குறித்து கருத்து கேட்டதில் மக்கள் அப்படத்துக்கு எதிராக தான் கருத்து தெரிவித்து வருவது குறிப்படத்தக்கது.

இந்நிலையில் மாஸ்டர் படம் வெற்றி, தோல்வி பற்றி நடிகர் விஜய் பொருட்படுத்தவில்லை என்றும், அவர் படம் வெளியாகவில்லை என்றால் விநியோகஸ்தர்களிடம் இருந்து கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதால், அவர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என முடிவு செய்து மாஸ்டர் படத்தை வெளியிட்டுள்ளதாகவும், ஆனால் படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றால் விநியோகஸ்தர்கள் மீண்டும் நடிகர் விஜயை தொந்தரவு செய்ய நேரிடும் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருவது குறிப்படத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .