நடிகர் விஜயை தண்னுடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்க்கு கோபத்துடன் பதிலளித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, நடைபெறும் நகராட்சி தேத்தலில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு நாம் தமிழர் கட்சி ஈடு கொடுக்க முடியுமா.? என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு ஆவேசம் அடைந்த சீமான்.
உன்னையெல்லாம் யாரு உள்ளே விட்டது.? என கேள்வியெழுப்பிய பத்திரிகையாளரை நோக்கி ஆவேசம் அடைந்த சீமான், மேலும் எதைக் கேட்க வேண்டும் என்ற ஒன்று இருக்கு, விஜய்க்கு எனக்கும் போட்டியா.? நான் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா, ஆட்சியில் இருக்கும் திமுகவை எதிர்த்து சண்டையிட்டு கொண்டிருக்கிறேன். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார், அவரை என்னுடன் இணைத்து, அவருக்கும் உங்களுக்கும் போட்டி என்று கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம்.
எனக்கும் அவருக்கும் போட்டி என்று விஜய் சொன்னாரா.? நீ யாரு முதல்ல.? நீ எதற்கு இந்த கேள்வி கேட்கிற.? உன்னுடைய நோக்கம் என்ன.? என சீமான் ஆவேசமாக பேச அதற்கு, கேள்வி கேட்பது தான் என்னுடைய நோக்கம் என பதிலளித்தார் பத்திரிக்கையாளர், அதற்கு சீமான், கேள்வி கேட்பது தான் உன்னுடைய வேலையா. அப்படியானால் உனக்கு பதில் சொல்லிக் கொண்டே இருப்பது என்னுடைய வேலை என்று நினைக்கிறாயா.?
தேவை இல்லாம எதற்கு கேள்வி கேட்கிற.? எனக்கு போட்டி என்று விஜய் சொன்னாரா.? நான் விஜய்யுடன் போட்டி போட வந்தேனா.? என சீமான் பேசிய போது இடைமறித்த பத்திரிகையாளர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 100க்கு மேற்பட்ட இடஙக்ளில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது இது நாம் தமிழர் கட்சியின் தோல்வியாக பார்க்கலாமா என கேட்க, அதற்கு சீமான். அதை ஏன் திமுகவின் தோல்வி என்று நீ சொல்ல மாட்டேன் என்கிற.
100க்கு மேற்பட்ட இடங்களில் விஜய் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதா.? நான் சொல்கிறேன் 2000 இடத்தில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று, அதை அப்படியே செய்தியாக போடுவியா.? தேர்தல் ஆணையம் சொல்லுச்சா அல்லது விஜய் சொன்னாரா.? நாங்கள் நூறு இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று. ஏதாவது காமெடி பண்ணாத போ.. போ.. நாங்கள் ஒரே சின்னத்தில் போட்டியிடுகிறோம், அவர் வேறு வேறு சின்னத்தில் சின்னத்தில் போட்டியிடுகிறார் எதையும் பேச வேண்டும் என பேச வேண்டாம் என சீமான் பதிலளித்தார்.