தடுப்புசி திட்டத்தை விரைவுபடுத்த உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்ய கடந்த மே மாதம் 12ம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசு அதிரடி முடிவெடுத்தது. இந்த கூட்டம் முடிந்ததும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு, 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்குப் போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்திற்குள் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு முனைப்புடன் எடுக்கும் என தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்யப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அடித்த அதிரடி சிக்சர் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழக அரசு உலகளாவிய அளவில் தடுப்பூசியை கொள்முதல் செய்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தலாம் என முடிவெடுத்ததை தொடர்ந்து , இதன் தொடர்ச்சியாக 15-ந்தேதி 3.5 கோடி தடுப்பூசிகளை வினியோகம் செய்வதற்கான உலகளாவிய டெண்டரை, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கோரியது. அதில் டெண்டர் எடுக்கும் நிறுவனம், கொள்முதல் ஆணை பெற்ற 180 நாட்களுக்குள் தடுப்பூசியை வினியோகம் செய்ய வேண்டும் என்றும்,
டெண்டர் எடுப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த டெண்டரை ஏலம் எடுப்பதற்கு யாருமே முன்வரவில்லை. கொரோனா தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பாக, இந்த டெண்டருக்கு ஜூன் 5-ம் தேதி காலை 11 மணிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அன்றைய தினம் பகல் 12 மணிக்கு டெண்டர் திறக்கப்பட்டு, தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான நிறுவனம் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஒரு நிறுவனம் கூட டெண்டர் கோர ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒருமுறை உலகளாவிய டெண்டர் விடப்படும் என சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்யப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடந்த மே மாதம் 12ம் தேதி அடித்த அதிரடி சிக்சர் செங்குத்தாக உயர பறந்து அது போன வேகத்தில் திரும்பி ஸ்டெம்பில் பட்டு அவுட்டாகி விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.