தமிழ் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டவுடன் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அரசு பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று கூறிவிட்டு, ஐந்து ரூபாய் பயணச்சீட்டை 10 ரூபாய்யாக ஆண்களிடம் வசூல் செய்யப்பட்டுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தமிழக அரசு மற்றும் போக்குவரத்து துறையை குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்பட்டுகிறது. இந்த வருவாய் இழப்பை சரிசெய்ய ஆண்களிடம் சாதா கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதை கடுமையாக கண்டித்துள்ளார். மகளிருக்கு இலவச பயணச்சீட்டு கொடுத்துவிட்டு ஆண்களுக்கு பல மடங்கு கட்டணம் வசூல் செய்வதை தமிழக முதல்வர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மகளிருக்கு இலவச பயணச்சீட்டை கொடுத்துவிட்டு ஆண்களிடம் கட்டண வசூல் செய்யவில்லை. ஒரு இடத்தில் மட்டும் இதுபோன்ற தவறு நடந்துள்ளது. இந்த தவறை செய்த கண்டக்டர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக கூறினார்.