பேத்தியா நடிக்க வேண்டிய கீர்த்தி தங்கச்சியா.? மனசாட்சிப்படி இவங்க தானே உங்க தங்கச்சியா நடித்திருக்கனும்..! புளு சட்டை மாறன் உச்சக்கட்ட அலப்பறை..

0
Follow on Google News

பிரபல சினிமா விமர்சகர் புளு சட்டை மாறன், நகைச்சுவை கலந்து நக்கலாக புதிய படங்களை விமர்சனம் செய்து வருகின்றவர். பெருபாலன படங்கள் இவரின் எதிர்மறை விமர்சனத்தில் சிக்கி சின்னா பின்னமான கதைகள் ஏராளம், இவர் திரைப்படத்தை மட்டும் விமர்சனம் செய்வது கிடையாது, அந்த படத்தில் நடித்த நடிகர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து அந்தந்த ரசிகர்களின் கடும் எதிப்புக்கு உள்ளாகி வருகின்றவர்.

இந்நிலையில் சமீபத்தில் அண்ணாத்தே குறித்து புழு சட்டை மாறன் வெளியிட்ட எதிர்மறை விமர்சனம், ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியதை தொடர்ந்து புழு சட்டை மாறனை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வந்த ரஜினி ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், மேலும் அவர்களை கோபம் அடைய செய்யும் விதத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

அதில், ஜெய்பீம் படத்தை பற்றி கருத்து சொல்லவில்லை. சர்ச்சை குறித்து பேசவும் இல்லை. தலீவர் வழக்கம்போல மௌனமாய் இருக்கிறார். Hoote App சொந்தப்பட ப்ரமோஷனுக்கு மட்டும்தானா? தமிழ் சமூகம் மற்றும் சக கலைஞனுக்காக அதில் பேச மாட்டீர்களா? தலீவரே? என்றும் மேலும் இயக்குனர் வெற்றி மாறன் ஜெய்பீம் குறித்து கருத்து தெரிவித்துள்ளதை சுட்டி காட்டி, வெற்றிமாறன் – திரையுலகில்… அறத்தின் பக்கம் நிற்கும் அச்சமற்ற ஆண்மகன்.

தலீவர் அனைத்தையும் வேடிக்கை பார்த்துவிட்டு வழக்கம்போல கடைசியில் திருவாய் மலர்வார் அல்லது கமுக்கமாக இருப்பார். கல்யாணத்துக்கு வரச்சொன்னா அறுபதாம் கல்யாணத்துக்கு வர்றதுதானே தலீவரின் வழக்கம். என்றும், மேலும் தலீவரின் அறிக்கை இப்படித்தான் ஈயம் பூசி இருக்கும்.. ஜெய்பீம் படம் வந்ததே எனக்கு இன்றுதான் தெரியும். படம் பார்த்தேன், Hats off Surya Ji. கருத்து சுதந்திரம் ஒரு எல்லைக்குள்ளும், எல்லைகளை தாண்டியும் இருக்க வேண்டும். அதை யாரும் முடக்க கூடாது, முடக்காமலும் இருக்கக்கூடாது.

மேலும் மற்றொரு பதிவில், தலைவரே உங்க வயசு 70 இவங்க வயது 67 என அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் பாட்டியாக நடித்தவரை சுட்டிக்காட்டி, மனசாட்சிப்படி இவங்க தானே உங்க தங்கச்சியா நடித்திருக்கும் ஆனால் நடிச்சிருக்காங்க பேத்தியா நடிக்க வேண்டிய கீர்த்தி தங்கச்சியா என்ன இருந்தாலும் ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா தலைவரே என புளு சட்டை மாறன் தொடர்ந்து ரஜினிகாந்தை நக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.