மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் பாஜக மாநில பொதுசெயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன், மத்திய பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கி பேசினார், பின்னர் அவர் செய்தியளர்களை சந்தித்து பேசுகையில், சசிகலா மற்றும் TTV தினகரன் ஆகியோரின் செயல்களை மறைந்த ஜெயலலிதா அம்மையார் அவர்களின் ஆன்மா கூட மன்னிக்காது என தெரிவித்தார்.
பேராசிரியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக- அமமுக கூட்டணி அமைந்தால் அது எங்கள் தலைமையில் தான் அதிமுக போட்டியிட வேண்டும் என கூறியிருக்கிறார், இதெல்லாம் கொஞ்சம் அதிகம், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 6 சதவீதம் வாக்குகளை பெற்று அதன் பிறகு தொடர்ந்து வாக்கு சதவீத சரிவை சந்தித்த தினகரன் தலைமையிலான அமமுக கட்சி.

ஆனால் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் அதிமுக எங்கள் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என தினகரன் சொல்வது இந்த அரசியல் பற்றியும், அரசியல் கட்சிகளைப் பற்றியும் என்ன நினைக்கிறார் என்பது பற்றி தெரிகிறது,தொடர்ந்து பேசிய பேராசிரியர், எனது தனிப்பட்ட வேண்டுகோளை சசிகலா மற்றும் தினகரன் ஆகிய இருவருக்கு விடுக்கிறேன், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை பிரித்து திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக சசிகலா மற்றும் தினகரன் இருக்க நேர்ந்தால் அவர்களை ஜெயலலிதா அம்மையார் அவர்களின் ஆன்மா கூட மன்னிக்காது.
ஜெயலலிதா அம்மா உயிருடன் இருந்திருந்தால் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து அழகு பார்க்க மாட்டார்கள், அதனால் சசிகலா மற்றும் தினகரன் இவர்களின் நோக்கம் வாக்கு பிளவை உருவாக்க வேண்டும் அதன் மூலமாக திமுகவை ஆட்சியில் உட்கார வைக்க வேண்டும் என்பது தான் இவர்களின் திட்டமாக உள்ளது. அதனால் இவர்கள் திமுகவின் B டீம் ஆக செயல்படுகிறார்கள், இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. வெளிப்படையான அரசியல் தேவை, ஜனநாயக படி இது மாதிரியான போக்குகளை கண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார் பேராசிரியர்.
மேலும் அதிமுக- அமமுக இணைப்புக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர், பாஜக அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது, அமமுக உடன் கூட்டணி வேண்டுமா அல்லது அந்த கட்சியுடன் முழுமையாக இணைந்து கொள்ள வேண்டுமா என முடிவு செய்ய வேண்டியது அதிமுக கட்சி, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதில் எங்களுக்கு உடன்பாடுதான் என பதிலளித்தார்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .