என்னை தனியா சந்திக்கணுமா.? ஒழுங்கா வேலைய பாருங்க நானே உங்களை தேடி வருவேன்.. அண்ணாமலை அதிரடியில் கதிகலங்கிய சில மாவட்ட தலைவர்கள்…

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், எனக்கு வந்த கடிதங்களில் பெரும்பாலானவை மாநிலத் தலைவரை சந்திக்க நேரம் கிடைக்கல, என்ன பாக்க முடியல, என்று ஒரு சிலர் வருத்தப்படுகிறார்கள் சிலர் உரிமையோடு கோபப்படுறாங்க. அதுவும் கும்பலா இல்லாம தனியா பேச நேரம் கேட்பவர்கள் அதிகம். ஒரு சில மாவட்டத் தலைவர்கள் கூட, “நான் ஒரு மாவட்டத் தலைவராக இருந்தும் இன்னும் மாநிலத் தலைவர் என்னை அழைத்து பேசவில்லை எனக்கு நேரம் ஒதுக்கவில்லை.

என்னைப் பற்றி ஒண்ணுமே தெரியாது. நான் என் முகத்துக்கு முகம் அறிமுகமாகவில்லை”, என்று என்னுடைய அலுவலக செயலாளரிடம் எல்லாம் பேசுறாங்க. நீங்க சொல்றது ரொம்ப நியாயம். முக அறிமுகம் பரிச்சயம் இருந்தால்தான் இந்த டீம்ல நம்ம எல்லாம் ஒண்ணா வேலை செய்ய ஒரு உற்சாகம் கிடைக்கும். ஆனால் அந்த அரசியல் பாணியை நான் கொஞ்சம் மாற்ற விரும்புகிறேன். தனிநபர் தொடர்புக்குப் பதிலா இந்த நிர்வாகத் தொடர்பை உருவாக்க நினைக்கிறேன்.

அதற்காகத்தான் அனைத்து மாவட்டத் தலைவர்களிடமும், “மாதாந்திர தகவல் அறிக்கை”, கண்டிப்பாக கேட்கப்படுகிறது, செப்டம்பர் மாத அறிக்கையை தினசரிப் பட்டியலாக ஒரு சில மாவட்டங்களைத் தவிர பல மாவட்டத் தலைவர்கள் உற்சாகமாக அனுப்பியுள்ளனர். எனக்கு இப்போதுதான் தெரிகிறது ஒரு சில மாவட்டங்களில் மிகமிக உற்சாகமாக வேலைகள் நடக்கின்றன. அவர்களை நான் தனித்தனியே தொடர்பு கொண்டு பேசுவேன்.

என்னை மாவட்டத் தலைவர்கள் அடிக்கடி வந்து பார்க்கணும் காலையில் ஒரு குட் மார்னிங், இரவில் ஒரு குட் நைட் சொல்லனும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏன் என்னை வந்து பாக்கல அப்படின்னு நான் உங்களை கேள்வியும் கேட்கப் போறதில்லை ஆனால் மக்களைச் சென்று பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக உங்களைக் கேள்வி கேட்பேன்.

நான் மாநிலம் முழுக்க மக்களைச் சந்திக்கப் போவது போல நீங்க உங்க மாவட்டம் முழுக்க பயணிக்கணும், மக்களைச் சந்திக்கப் போங்க நான் எப்போது உங்களைச் சந்திக்க வேண்டுமோ அந்தநேரமும் காலமும் தேவையும் வரும்போது கண்டிப்பாக ஒன்று நான் உங்கள் இடத்திற்கு வந்து உங்களைச் சந்தித்துப் பேசுவேன் அல்லது உங்களை அழைத்துப் பேசுவேன். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக அடுத்த பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. மூன்றாண்டுகள் நீண்ட காலம் இல்லை அது ஒரு குறுகிய காலக்கெடு.

அதற்குள்ளாக நாம் ஒரு அடையாளத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எனக்கு வேண்டும். நாமெல்லாம் ஒரே டீம் இதில் யாரும் பெரியவங்க, சின்னவங்க அப்படிங்கிற பேதம் கிடையாது. கட்சியைப் பொருத்தவரை நீங்கள் ஒரு பாஜக நிர்வாகி நானும் ஒரு பாஜக நிர்வாகி அவ்வளவே.

ஒவ்வொரு நிர்வாகியிடமும் நான் தனிநபர் தொடர்பைவிட அதிகமான நிர்வாகத் தொடர்பை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் மாவட்டத்தில்/ மண்டலில் / பூத்தில் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியை வெற்றிகரமாகச் செய்யுங்கள். ஒவ்வொரு நிர்வாகியும் மாதாந்திரத் தகவல்களை ஆதாரங்களுடன் எனக்கு அனுப்பி வையுங்கள் அது தங்கள் முப்பது நாட்களுக்கான டைரிக் குறிப்பாக இருக்கலாம். சில நாட்கள் கட்சிப்பணி ஆற்றமுடியாத சூழல் இருக்கலாம் தவறில்லை, அன்று தனிப்பட்ட வேலை என அந்த நாளில் குறிப்பிடலாம்.

ஒரு மாநிலத் தலைவராக நான் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாகச் செலவிட முழுமுயற்சி செய்கிறேன். நான் அறைக்குள்ளே அமர்ந்து அரசியல் செய்ய விரும்ப வில்லை, மக்களிடத்தில் இருக்க விரும்புறேன். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய நபராக இருக்க விரும்புறேன். அதையே நம் மாவட்ட /மண்டல்/பூத் தலைவர்களிடமும் நான் எதிர்பார்க்கிறேன். என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிவன் சொத்து குல நாசம், திமுகவை எதிர்த்து துர்கா ஸ்டாலின் தலைமையில் பாஜகவின் அடுத்த ஆர்ப்பாட்டம்.. திருச்சியில் நடத்த பாஜக ஆர்பாட்டத்தில் பேராசிரியர் பேச்சு…