உங்க தொலைபேசியில் தப்பி தவறி கூட இதை மட்டும் செய்து விடாதீர்கள்…. நீங்கள் பெரும் சிக்கலில் மாட்டி கொள்வீர்கள்…. காவல் துறை எச்சரிக்கை..

0
Follow on Google News

தொலைபேசி வாயிலாக நடக்கும் நூதன முறை கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதத்திலும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க சென்னை பெருநகர் காவல் ஆணையர் தெரிவித்ததாவது. சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் ” YOUR MOBILE NUMBER WAS SELECTED FOR PAYMENT OF 5.7 CRORE RUPEES IN E.U DONATION 2021 TO Receive SEND / NAME / AGE / MOBILE NO TO/Email: [email protected]” மேற்குறிப்பிட்டவாறு குறுஞ்செய்திகள் மொபைல் நம்பருக்கும் வாட்சப் நம்பருக்கும் அதிகளவில் மோசடி நபர்களால் அனுப்பப்படுகிறது.

அந்த மெசேஜில் உள்ள உள்ள மெயில் ஐடிக்கு பதிலளிக்கும் பட்சத்தில், லாட்டரி தொகையை பெற மேற்கொண்டு பணம் செலுத்த வேண்டும் என்று கூறி பொதுமக்களிடம் பணம் பறிப்பார்கள். இதேபோல்
“Dear SBI user your SBI YONO Account will be block today. Please click here link update your PAN CARD Number . Thank you SBI https://bit.ly/3nGNul9 ” “Hi Mr./Ms.(Certified ) Flipkrat urgently recruits Part – job / Full – job . Maximum daily salary about Rs.10000 Accept Job on whatsapp : wa.me/919731866720 “

“Dear, Online part – time work can earn 200-20000 rupees a day and 100 rupees in 10 minutes. Whatsapp. reply 1 on https://wa.me/919731866720 . Team LKSPS என்ற மெசேஜ்களும் அதிகளவில் பகிரப்படுகின்றன . இது போன்ற பொய் செய்திகளை நம்பி மக்கள் பணத்தை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். “பேங்க் அக்கவுண்ட் பிளாக் செய்யப்படும்” என்று மெசேஜ் வந்தால் அதிலுள்ள லிங்கை கிளிக் செய்யக்கூடாது,

“மொபைல் நம்பர் டீ ஆக்டிவேட் ஆகிவிடும்” என்று மெசேஜ் வந்தால் அதிலுள்ள லிங்கை கிளிக் செய்யக்கூடாது. ஆன்லைனில் வரும் “பார்ட்டைம் ஜாப்” போன்ற லிங்கை கிளிக் செய்ய கூடாது, அதற்கு பதில் வலதுபக்கம் க்ளிக் செய்து அதை டெலீட் செய்யவும். “கிப்ட் பார்சல் வந்திருக்கிறது” என்று கூறி பணம் அனுப்ப கூறினாலோ, வேலை கிடைப்பதற்கு முன்பணம் செலுத்துங்கள் என்று கூறினாலோ, வெளிநாடுகளில் பிசினஸ் செய்து லாபம் பெறலாம் என்று கூறி எண்ணெய், விதைகள், ரசாயணப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கு பணம் கட்ட சொல்லி,

யாரேனும் உங்களுக்கு தெரியாதவர்கள் திடீரென கூறினாலோ அந்த அழைப்பை முற்றிலும் தவிர்த்து
விடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணையதளங்களிலோ, பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக
வலைதளங்களிலோ வெளிநாட்டவர் என்று கூறி பழகும் நபர்களுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.மேட்ரிமோனி தளங்களில் திருமணத்திற்கோ மறுமணத்திற்கோ பதிவு செய்யும் போது வரனை நேரில் பார்க்காமல் பரிசு பொருட்களை பெறுவதற்கு என பணம் அனுப்ப வேண்டாம், என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவன் சொத்து குல நாசம், திமுகவை எதிர்த்து துர்கா ஸ்டாலின் தலைமையில் பாஜகவின் அடுத்த ஆர்ப்பாட்டம்.. திருச்சியில் நடத்த பாஜக ஆர்பாட்டத்தில் பேராசிரியர் பேச்சு…