சொகுசு பேருந்தில் நகை திருடிய திமுக இளைஞரணி அணி துணை செயலாளர் கைது.! பேருந்தில் பயணம் செய்பவர்கள் உஷார்.!

0
Follow on Google News

நெடுதூரம் பயணம் செய்பவர்கள் தங்கள் உடைமைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என அங்காங்கே சாலை ஓரத்தில் எச்சரிக்கை பலகை இருக்கும், மேலும் பேருந்தில் உள்ளே இது போன்ற எச்சரிக்கும் வாசகம் இருக்கும், நெடுதூரம் பயணம் செய்பவர்கள் இரவு நேரங்களில் தங்க நகைகளை கழுத்தில் அணிந்து செல்ல அச்சப்பட்டு பாதுகாப்பாக தங்கள் கை பைக்குள் வைத்து கொண்டு செல்வது வழக்கம். பகல் நேரங்களில் கூட அசந்து பேருந்தில் தூங்கி விடுவோம் என்ற அச்சத்தில் இது போன்று தங்க நகைகளை பாதுகாப்பாக கொண்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், சென்னை திருவெற்றியூர் ராஞ்சி நகரை சேர்ந்தவர் சாம்சன், இவர் மனைவியுடன் நெல்லைக்கு சொகுசு பேருந்தில் சென்னையில் இருந்து நெல்லையை நோக்கி பயணம் மேற்கொண்டார், நெடுதூரம் செல்லும் பேருந்துகள் சாலை ஓரம் இருக்கும் உணவகம் அருகே நிறுத்தி, அங்கே பயணிகள் உணவு அருந்த மற்றும் ரெஸ்ட் ரூம் செல்ல எதுவாக சில நிமிடங்கள் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு சில நிமிடங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், அச்சரப்பாக்கம் அடுத்த தேன்பாக்கம் அருகே ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பஸ் நின்றபோது, சாம்சன் உட்பட பேருந்தில் பயணித்த அனைவரும் பஸ்ஸில் இருந்து இறங்கி ஓட்டலில் சாப்பிட சென்றனர், பிறகு வந்து பார்த்தபோது சாம்சன் பையில் இருந்த 7 1/2 பவுன் தங்க நகைகளை காணவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த சாம்சன் இதுகுறித்து அச்சரபாக்கம் போலீசில் புகார் செய்தார்,

இதனை தொடர்ந்து அச்சரபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்த திமுக இளைஞர் அணி நகர துணைச் செயலாளர் தமீம் தங்க நகையை திருடியது தெரியவந்தது, இவருக்கு 27 வயது, இதையடுத்து போலீசார் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், இவர் திருடுவதற்கு முன் பேருந்தில் இருந்த ஒவ்வொருவரையும் மிக தீவிரமாக நோட்டமிட்டுள்ளார்.

அதன் பின் சாம்சன் பையில் இருந்த தங்க நகையை லாபகரமாக திருடியுள்ளது தெரியவந்துள்ளது, மேலும் அதே பகுதியில் 3 பவுன் நகை திருட்டு திருடியதும் தெரிய வந்தது பின்னர் தமீமிடம் இருந்து 10 1/2 பவுன் நகைகளை போலீசார் கைப்பற்றினர் பின்னர் அவரை மதுராந்தங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திமுக இளைஞர் அணி நகர துணைச் செயலாளர் நகை திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .