அதிமுக முக்கிய புள்ளிகளிடம் திமுக எம்.எல்.ஏ மூர்த்தி டீலிங்கில் ஈடுபட்டு இறுதியில் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் சீட்டிங் எம்.எல்.ஏ வாக இருக்கும் திமுக மாவட்ட செயலாளர் மூர்த்தி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே மீண்டும் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
கிழக்கு தொகுதியில் ஒரு சட்டமன்ற உறுப்பினராக சொல்லுபடி ஏதும் மூர்த்தி செய்யவில்லை என அந்த பகுதி மக்கள் குமுறல், மேலும் மக்கள் மத்தியில் அவருக்கு நற்பெயரும் இல்லை என்பதை அறிந்த மூர்த்தி, தனக்கு எதிராக களம் இறங்கும் வேட்பாளர் டம்மியாக இருந்தால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தால் வெற்றி பெற்று விடலாம் என அதற்கான திரைமறைவு வேலையில் கடந்த ஒரு வருடமாக ஈடுபட்டுவந்த மூர்த்தி, அதிமுக சில முக்கிய புள்ளிகளிடம் டீலிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார் என கூறப்படுகிறது.
அந்த அதிமுக முக்கிய புள்ளிகள் போட்டியிடும் தொகுதியில் திமுக சார்பில் டம்மியான வேட்பாளரை நிறுத்துவது, அதே போன்று தான் போட்டியிடும் மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட்டால், அதன் கட்சியின் சார்பில் முன்னால் எம்பி கோபாலகிருஷ்ணன் போட்டியிடுவார், இதனால் தனது வெற்றி வாய்ப்பு பாதிக்கும் ஆகையால் மதுரை கிழக்கு தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக முக்கிய புள்ளிகளிடம் டீலிங் பேசியுள்ளார்.
மூர்த்தி டீலிங் படி அதிமுக முக்கிய அமைச்சருக்கு எதிராக திமுக சார்பில் டம்மியான ஒரு பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர், மற்றும் ஒருவரும் மூர்த்தி நடந்தும் குவாரிகளுக்கு இடையூறு செய்யாமல் இருக்க அவருக்கு ஆதரவான அரசு அதிகாரிகளை நியமித்து தொடர்ந்து அண்டர் டீலிங்கில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும், அந்த அதிமுக முக்கிய புள்ளி போட்டியிடும் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியத்தில் முக்கிய பங்காற்றி வந்துள்ளார் மூர்த்தி.
ஆனால் மூர்த்தி போட்டியிடும் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு திரைமறைவு ஒப்பந்தம் படி ஒதுக்காமல் தனக்கு எதிராக யார் போட்டியிட கூடாது என நினைத்து திரைமறைவு அரசியல் நடத்தி வந்த மூர்த்திக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில், முன்னால் அதிமுக எம்பி கோபால கிருஷ்ணன் அதிமுக வேட்பாளராக களம் இறங்கியது என்ன செய்வது என திகைத்து போய் அதிமுக முக்கிய புள்ளிகளால் ஏமாற்றப்பட்டு விட்டோம் இனிமேல், வெற்றி பெறுவோமா என குழப்பத்தில் மதுரை கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார் மூர்த்தி.
ஆனால் இது குறித்து விசாரித்ததில் மதுரை கிழக்கு தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட அதிமுக முக்கிய புள்ளிகள் முயற்சி செய்துள்ளனர், ஆனால் கூட்டணி காட்சிகள் ஏற்று கொள்ளவில்லை என்றும், மேலும் அதிமுக சார்பில் கோபாலகிருஷ்ணன் போட்டியிட்டால் மூர்த்தியை வீழ்த்தி வெற்றி பெற்றுவிடுவார் என உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் படி, முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் ஒருமித்த கருத்துடன் கோபாலகிருஷ்ணனை மதுரை கிழக்கு தொகுதியில் களம் இறங்கி திமுக எம்.எல்.ஏ மூர்த்திக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.