வருகின்ற சட்டசபை தேர்தலில், அதிமுக தலைமையில் பாமக, பாஜக போன்ற கட்சிகளும், திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக இன்னும் சில கட்சிகளும், கமல்ஹாசன் தலைமையில் ஒரு கூட்டணி, அமமுக தலைமையில் ஒரு கூட்டணி, மற்றும் தனியாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவி வந்தாலும், பிராதன கட்சியான அதிமுக-திமுக இடையே தான் அடுத்து யார் ஆட்சி அமைப்பது என போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து தேமுதிக நடத்திய பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் நீடித்த நிலையில், இறுதியாக அதிமுக தரப்பில் இருந்து 12 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுக்க முன் வந்தனர், ஆனால் அந்த 12 தொகுதிகளில் நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக பிடிவாதமாக இருந்ததை தொடர்ந்து அதற்கு அதிமுக உடன்படவில்லை.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக மிக கடுமையாக அதிமுக கட்சியை விமர்சனம் செய்தது, வரும் தேர்தலில் அதிமுக அணைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று சுதீஷ், மற்றும் விஜயகாந்த் மகன் பிரபாகரன் கடத்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் இருக்க காரணம் தேமுதிக தான் என கடுமையாக விமர்சனம் செய்தார், இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெற போகிறது என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் திமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான எ.வ.வேலுவை தொடர்பு கொண்டு கூட்டணி குறித்து பேசியுள்ளார், அதற்கு தலைவர் ஸ்டாலினிடம் பேசிவிட்டு பதில் கூறுவதாக தெரிவித்துள்ளார், இதனிடையே ஸ்டாலினிடம் தொடர்புகொண்டு எ.வ.வேலு பேசியபோது, கூட்டணி தொகுதி பங்கீடு அனைத்தும் முடிந்துவிட்டது, வேட்பாளர் அறிவிக்கும் நேரத்தில் வந்து என்னத்த பேசுவது என தெரிவித்த ஸ்டாலின், நீங்கள் எந்த உத்தரவாதமும் கொடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதன் பின்பு எ.வ.வேலுவை மீண்டும் எல்.கே.சுதீஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது ஸ்டாலின் சொன்ன தகவலை அவரிடம் தெரிவித்துள்ளார், இதனிடையே கொடுக்கிற தொகுதியை பெற்றுக்கொள்ள மீண்டும் அதிமுக பேச்சுவார்த்தை குழுவை தொடர்பு கொண்டுள்ளனர் தேமுதிக தரப்பினர், ஆனால் அதிமுக தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வராததால், பாஜக தலைவர்களின் பேசி அதிமுக கூட்டணியில் இடம்பெற எடப்பாடி பழனிசாமியிடம் பேசுங்கள் என தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதிமுக மீண்டும் தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்துமா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் தேமுதிக தனித்து போட்டியிடுமா அல்லது கமல்ஹாசன் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுமா.? அமமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பது குறித்து பெரும் குழப்பத்தில் தேமுதிக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.