பாஜக மிரட்டலுக்கு அடி பணிந்ததா திமுக.? அத்துமீறி நுழைய தயார் நிலையில் கெத்து காட்டிய பாஜக… வேறு வழியின்றி கோவிலை திறந்த திமுக…

0
Follow on Google News

வர இறுதிநாட்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தளங்களை திறக்க வலியுறுத்தி கடந்த 7ம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழகத்தில் முக்கிய வழிபாட்டு தளங்கள் முன்பு தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பத்து நாட்கள் திமுக அரசுக்கு கெடு விதித்தார், அதற்குள் வழிபாட்டு தளங்களை திறக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதே போன்று தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில். நாங்கள் ஜனநாயகத்தின் அமைதியான அறப்போராட்டத்தில் நம்பிக்கை உள்ள கட்சி, நாங்கள் எதற்கும் வன்முறையை கையாளுவது இல்லை, தேவையில்லாமல் வன்முறையை கையாளுவது இல்லை, அதனால் வருகின்றன வெள்ளி சனி, ஞாயிறு, மூன்று நாட்கள் தமிழக அரசுக்கு அவகாசம் தருகிறோம்.

அடுத்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பக்தருக்கு அனுமதி இல்லை என்றால், அத்துணை பேரும் ஆயிரக்கணக்கில் கோவிலில் அத்துமீறி உள்ளே நுழைவோம் என அறிவிக்கிறோம். தமிழ்நாட்டில் வேறு எங்கும் இந்த போராட்டம் நடை பெறுகிறதோ இல்லையோ திருச்சி திருப்புமுனை தரக்கூடிய மாவட்டம், இங்கே அந்தப் போராட்டம் நடந்தே தீரும், கைது செய்தால் பரவாயில்லை.

கோவிலை காக்க எத்தனையோ பேர் மாலிக்கபூர், அலாவுதீன் கில்ஜியிடமும் போராடி இருக்கிறார்கள் திமுகவிடம் ஸ்டாலினிடம் போராட மாட்டோமா.? பார்க்கலாம் அரசாங்கம் என்ன செய்கிறது என்று, உள்ளே நுழைவோம் கைது பண்ணுங்கள் என திருச்சி ஆர்பாட்டத்தில் பேராசிரியர் பேசியிருந்தார் இந்நிலையில் கடந்த வாரம் பேசியது போன்று நாளை வெள்ளி கிழமை விஜயதசமி அன்று கோவில் திறக்கப்படவில்லை என்றால் அத்து மீறி நுழைவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் திடீரென அணைத்து நாட்களும் வழிபாட்டு தளங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது பாஜக நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக தமிழக அரசியலில் பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பின் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை அத்து மீறி நுழைவதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

சிவன் சொத்து குல நாசம், திமுகவை எதிர்த்து துர்கா ஸ்டாலின் தலைமையில் பாஜகவின் அடுத்த ஆர்ப்பாட்டம்.. திருச்சியில் நடத்த பாஜக ஆர்பாட்டத்தில் பேராசிரியர் பேச்சு…