ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி மதுரை வருவதை தொடர்ந்து. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மதுரையில் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர். தமிழக காவல்துறை குறித்த பேசுகையில். தமிழக காவல்துறைக்கு ஆதரவாக அரசியலை கடந்து அதிகம் பேசக் கூடிய நபர் நான்.
காரணம் என்னவென்றால் காவல்துறையில் பத்தாண்டு காலம் நான் பணி புரிந்ததால் அதன் கஷ்டம் எனக்கு தெரியும். சில சமயம் நாம் பேசுவதைக் கூட தொலைக்காட்சி நண்பர்கள் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள், நீங்க காவல்துறையை திறனாய்வு பண்றீங்க ,இந்த அதிகாரியை கூட தவறாக பேசி விட்டீர்கள் என்கின்றார்கள். ஆனால் நான் பேசுவது எல்லாமே ஆதங்கம் தான்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய் விட்டது என்றால், அதனால் வரும் முதல் பாதிப்பு தெருவில் நடந்து போகும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு மற்றும் குழந்தைகளுக்கு தான் முதல் பாதிப்பு. இதை நான் கண்கூடாக பார்த்து இருக்கின்றேன். காவல் நிலையத்தில் இருக்கும் காவல் துறை துணை ஆணையருக்கு அந்தக் கம்பீரம் இல்லை என்றால், அதனால் வரும் முதல் பாதிப்பு நம் சகோதர சகோதரிகளுக்கும் குழந்தைகளுக்கும் தான் பாதிப்படைகின்றது.
காவல் துறையை பொருத்தவரை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு அற்புதமான அதிகார. நாம் சொன்ன கருத்து கூட அவரை திமுகவினர் செயல்பட விடவில்லையே என்கின்ற கருத்து தான். நேற்று கூட டிஜிபி சார் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடுகளை விட்டுக் கொடுக்காதீர்கள் என்று, இதைத்தான் நாங்கள் மூன்று மாதமாக சொல்கின்றோம். ஆளுங்கட்சியின் அழுத்தத்தை டிஜிபி மேல் செலுத்தாதீர்கள்.
மேலும் காவல்துறை அதிகாரிகள் மீது போடாதீர்கள் நீங்க போட ஆரம்பித்து விட்டாள் 2006 இல் இருந்து 2011 வரை நடந்த ஆட்சி நடக்க ஆரம்பிக்கும், ஜாதி வன்மம் கொலைகள் நடக்க ஆரம்பிக்கும். ஒரு சிறுமி தற்கொலை செய்யும் போது என்னுடைய நிம்மதி தாயின் கருவறையும் கல்லறையும் தான் என எழுதி வைத்துள்ளார், அந்த அளவுக்கு மோசமா போய்விட்டது. தமிழக காவல்துறை அனைத்திலும் பொருத்தமாக இருக்கின்றது.
திமுகவை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகள் காவல்துறையை வேலை செய்ய விட்டுவிட்டு இவர்கள் ஒதுங்கி இருந்தால் போதும் குறைந்தது ஒரு பத்து நாட்களிலேயே தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து விடுவார்கள் காவல்துறையினர். ஏனென்றால் அந்த தகுதி நமக்கு காவல்துறைக்கு இருக்கின்றது இவர்கள் விடவேண்டும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் திமுகவை சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்ய காவல் நிலைய துணை ஆணையருக்கு கட்டளையிட்டார்கள் என்றால்,
அப்படியானால் என்னைப் போன்றவர்கள் காரசாரமாக தான் கருத்து சொல்ல வேண்டி வரும். நாம் சொல்ல வருகின்ற கருத்துக்கள் ஏதும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரானது கிடையாது, திமுக தலைவர்கள் அவர்களை வேலை செய்ய விடுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.