இந்தியாவில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் பப்ஜி விளையாட்டை லைவாக விளையாடி ஆபாசமாக பேசி அதை யூடியூபில் அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வந்த பப்ஜி மதன் மீது புகார் அளிக்கப்பட்டது. பப்ஜி மதன் மீது புகார் அளிக்கப்பட்ட உடன் தலைமறைவானார். அவரது செல்போன் எண் ஒரு நம்பரை அடிக்கடி தொடர்பு கொண்டது. அந்த போன் நம்பரை டிரேஸ் செய்து அந்த நம்பர் இருக்கும் முகவரிக்கு போலீசார் சென்று சுற்றி வளைத்து உள்ளே சென்றால் அங்கு மதனுக்கு பதிலாக அங்கு இருந்தது மதனின் மனைவி கிருத்திகா.
கைக்குழந்தையுடன் இருந்த கிருத்திகாவை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மதனின் மனைவி தான் அவர் வைத்திருக்கும் யூட்யூப் சேனல்களுக்கு அட்மின். மேலும் ஆபாசமாக மதன் பேசுவதற்கு இவரும் உடந்தையாக செயல்பட்டதால் கைக்குழந்தையுடன் இருக்கும் இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து தீவிர தேடுதலுக்கு பிறகு மதன் சேலத்தில் கைதானார். இருவரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருந்துள்ளது.
இந்தநிலையில் கிருத்திகா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி பரமசிவம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருத்திகாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். மேலும் பிணைத் தொகையாக ஒரு லட்சம் செலுத்த உத்தரவிட்டனர்.
இதையடுத்து பப்ஜி மதனும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் மதனுக்கு ஜாமின் வழங்கப்பட்டால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிடும் என்று குற்றப்பிரிவு போலீசார் கூறியதையடுத்து, மதனின் ஜாமீனை தள்ளுபடி செய்தார் நீதிபதி பரமசிவம்.