சுவரொட்டிகளால் அழகிழந்த சென்னை மாநகராட்சி வண்ண ஓவியங்களால் அழகாக மாற போகிறது. விரைவில் சுவரொட்டிகளே இல்லாத மாநகராட்சியாக மாறப்போகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரை, தூய்மையாக மாற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம் புதிய பணி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள அரசு கட்டடங்கள், பேருந்து நிறுத்தம், நிழற்குடைகள், பாலங்கள், சாலையில் உள்ள தடுப்புகள் என பொது இடங்களில் ஒட்டப்பட்டு வரும் சுவரொட்டிகளால் சென்னை மாநகரின் அழகினை சீர்குலைக்கிறது.
இதனை கருத்தில் சென்னை மாநகராட்சியில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை அகற்றும் பணியை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலோசனையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களை வைத்து சுவரொட்டிகளை அகற்றும் பணியில் இறங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகமும் 100 சதவீதம் சுவரொட்டிகள் இல்லாத மாவட்டமாக மாற்ற தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
இதற்காக சென்னை மாநகராட்சி பொது இடங்களில் சுவரொட்டிகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுவரொட்டிகளை அகற்றிவிட்டு வண்ண ஓவியங்களை வரைந்து சென்னை மாநகராட்சியை அழகுப்படுத்தி தூய்மையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது மாநகராட்சி நிர்வாகம்.