இந்திய வீராங்கனை சாய்னா நோவாலை பாலியல் ரீதியாக ஆபாசமாக விமர்சனம் செய்து கடும் சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் சித்தார்த்க்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டன குரல் எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தேசிய மகளிர் ஆணையம் நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்து மஹாராஷ்ட்ரா மற்றும் தமிழக டிஜிபி க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது மேலும் நடிகர் சித்தார்த்துக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது தேசிய மகளிர் ஆணையம்.
இந்நிலையில் இந்திய வீராங்கனையை பாலியல் ரீதியாக ஆபாசமாக விமர்சனம் செய்த சித்தார்த்துக்கு கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துவரும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இது குறித்து வாய் திறப்பாரா என கேள்வி எழுந்துள்ள நிலையில். இந்த விவகாரம் குறித்து ஜோதிமணி தெரிவித்ததாவது, நம் எல்லோரையும் போல சாய்னா நோவாலுக்கும் தனது அரசியல் கருத்துக்களை சொல்லும் உரிமை இருக்கிறது.
அவருடைய கருத்தோடு முரண்பட்டால் நாகரிகமான முறையில் பதில் கருத்து சொல்லலாம், விமர்சிக்கலாம். அவர் பெண் என்பதாலேயே பாலியல் ரீதியான தாக்குதலை தொடுப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. சித்தார்த் தீவிரமான அரசியல் நிலைப்பாடு கொண்டவர். துணிச்சலாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தக் கூடியவர். சிறந்த கலைஞர். சமூகப் பொறுப்புணர்வு மிக்கவர். இளைய தலைமுறைக்கு ஒரு முன்மாதியாக இருப்பவர்.
அப்படிப்பட்டவர் மிகுந்த கவனத்தோடும்,பொறுப்போடும் கருத்துக்களை வெளியிடவேண்டும். பாஜக/ஆர் எஸ் எஸ் இயக்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட,திரு.மோடி உள்ளிட்ட தலைவர்களால் சமூக ஊடகங்களில் பின்தொடரக்கூடிய அந்த இயக்கத்தினர்,பெண்களிடம் ஆபாசமாகவும்,அறுவெறுக்கத்தக்க வகையிலும் நடந்துகொள்கிறார்கள்.பாலியல் ரீதியாக அச்சுறுத்தும் போக்கை கைக்கொள்கிறார்கள் என இந்த விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடிய ஜோதிமணி.
ஆனால் நடிகர் சித்தார்தின் கீழ்த்தரமான செயலுக்கு கண்டனம் தெரிவிக்காமல், அவர் சமூகப் பொறுப்புணர்வு மிக்கவர், துணிச்சலானவர் என புகழ்ந்து தள்ளியுள்ளது கடும் எதிப்பு கிளம்பியுள்ளது. சித்தார்த் பயன்படுத்திய வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? வெக்கமே இல்லையா உங்களுக்கு? பெண்ணை இவ்வளவு கேவலமான வார்த்தையை பிரயோகப்படுத்தி திட்டியவனை மயிலிறகால் தடவி குடுக்குறீங்களே? அசிங்கமாவே தோணலையா? என்றும்
மேலும் நீங்க எல்லாம் ஒரு பெண்ணா. அந்த பொறுக்கியை கண்டிக்க துப்பில்லை, நீங்கள் எல்லாம் இவனை ஆதரிக்கவில்லை என்றால் தான் அது அதிசயம் என்றும், மேலும் இந்த விவகாரத்தில் எதற்கு பாஜகவை தேவையின்றி வம்புக்கு இழுக்கிறீர்கள்.? இதுக்கும் பாஜக தான் காரணமா.? என வலைதளவாசிகளிடம் சித்தார்த்தை புகழ்ந்து செமத்தியா வாங்கி கொண்டிருக்கிறார் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.