புகார் தெரிவித்ததற்கு புகாரா.? கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்கப்பா என கடந்து சென்ற பாஜக ஐடி பிரிவு தலைவர்.!

0
Follow on Google News

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பயனாளர்களுக்கு வழங்கப்படும் Provisional Certificate-ல் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தையும் மார்ஃபிங் செய்யப்பட்ட சான்றிதழை, சமூக வலைதளத்தில் பதிவு செய்தவர் மீது கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் புகார் கொடுக்கப்பட்டது, இந்த புகார் குறித்து புகார் செய்த நாகல் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட Provisional Certificate-யையும் தனது டிவீட்டரில் வெளியிட்ட பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார்.

“இது போன்ற அவதூறுகளை செய்து வரும் திமுகவினர் மீது கன்னியாகுமரி மாவட்டம் பாஜக சார்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது” “மேலும் இது போன்ற அரசு முத்திரைகளை மாற்றும் வேலையை திமுகவினர் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துமாறு ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்” என பதிவு செய்திருந்தார் CTR நிர்மல் குமார். இதற்கு சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் துரை.அருண் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு தெரிவித்துள்ளார்.

அவர் கொடுத்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது. நான் கடந்த 12 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். மேலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து வழக்கு நடத்தி வருகிறேன். நான் Twitter சமூக வலைதளத்தில் கடந்த மார்ச் 2012ஆம் ஆண்டிலிருந்து கணக்கு வைத்துள்ளேன். தொடர்ச்சியாக Twitter
நிகழ்வுகளை கவனித்து வருகிறேன்.

இந்த நிலையில் கடந்த 09.06.2021 மாலை 6.37 மணியளவில் மேற்படி திரு.CTR. நிர்மல் குமார் என்பவர்
கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பயனாளர்களுக்கு வழங்கப்படும் Provisional Certificate-ல் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவத்தையும் பொறித்த மார்ஃபிங் செய்யப்பட்ட சான்றிதழை வெளியிட்டு திரு.CTR. நிர்மல் குமார் அவர்கள் பதிவிட்ட செய்தியானது

“இது போன்ற அவதூறுகளை செய்து வரும் திமுகவினர் மீது கன்னியாகுமரி மாவட்டம் பாஜக சார்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என்றும், “மேலும் இது போன்ற அரசு முத்திரைகளை மாற்றும் வேலையை திமுகவினர் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துமாறு ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்” என்றும், மேலும் அடுத்த பதிவாக “ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ் :- தடுப்பூசி பிரதமர் குடுத்தது.. போட்டோ மட்டும் என்னது:” என்றும் உண்மைக்கு புறம்பான தமிழ்நாடு அரசால் வழங்கப்படாத Provisional Certificate-ஐ வழங்கியதாக திட்டமிட்டு வன்மத்தோடு, வேண்டுமென்றே தீய எண்ணத்தோடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பும் நோக்கத்தோடு செய்திகளை பதிவிட்டுள்ளார். அதை பார்த்ததும் நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன்.

எனக்கு தெரிந்த அரசு வட்டாரத்தில் விசாரித்த பொழுது அப்படி எந்த சான்றிதழும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவில்லை என்ற கூறினார்கள். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்தோடு சதி திட்டம் தீட்டி, மார்ஃபிங் செய்து, ஒரு பொய்யான சான்றிதழை Twitter சமூக வலைதளத்தில் பதிவேற்றியதோடு மட்டுமல்லாமல் அது குறித்து புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது, உண்மைக்கு புறம்பானது.

எனவே, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், பொது ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், சமூக பதட்டத்தையும் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் மேற்படி பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த திரு.CTR. நிர்மல் குமார் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்நிலையில் மார்ஃபிங் செய்து, ஒரு பொய்யான சான்றிதழை சமூக வலைதளத்தில் பதிவேற்றியதற்காக பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு, அந்த புகார் நகல் மற்றும் மார்பிங் செய்த சான்றிதழை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததற்கு ,CTR நிர்மல்குமார் மீது எதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் அருண் புகார் கொடுத்துள்ளார் என பாஜகவினர் நகைப்புக்குரிய வகையில் பதிவு செய்து வருகின்றனர், மேலும் இது தொடர்ப்பாக தனது டிவீட்டர் பக்கத்தில் கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்கப்பா என இந்த புகாரை பொருட்படுத்தமால் பதிவு செய்து கடந்து சென்றுள்ளார் CTR நிர்மல் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.