கொரோனா குறைந்தாலும் கோயில்களை திறக்க மனமில்லை… தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்…

0
Follow on Google News

தமிழகத்தில் கொரோனா பரவலை காரணமாக காட்டி வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் தமிழக அரசால் மூடப்பட்ட கோயில்களை திறக்கக்கோரி தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா 2வது அலை தமிழகத்தில் படிப்படியாக குறைந்து தற்போது கை விட்டு எண்ணும் அளவே உள்ளது. ஆனாலும் தமிழக அரசு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஆடி மாதம் மிகவும் விசேஷமான மாதம் அதிகப்படியான பக்தர்கள் கூட்டம் கோயில்களில் இருக்கும் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவக்கூடும் என்று கூறி தமிழக அரசு சில வாரங்கள் இந்து கோயில்களை மூட உத்தரவிட்டது. அதன் பிறகு வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் கோயில்களைத் திறக்கவும் வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய தினங்களில் கோயில்களை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

தற்போது கொரோனா முழுமையாக குறைந்தாலும் தமிழக அரசு இந்து கோயில்களை திறப்பதில் ஆர்வம் காட்டவில்லை. நேற்று புரட்டாசி அமாவாசை முன்னிட்டு கூட மதுரை வைகையாற்றில் தற்பணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தீர்த்தங்களில் அமாவாசை தினத்தில் நீராடுவது வழக்கம் ஆனால் கொரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு அதற்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில் என தமிழகத்தில் 12 முக்கிய ஆலயம் முன்பு தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் எதிரில் மதுரை புறநகர், மாநகரின் பாஜகவினர் ஒன்று திரண்டு கோயில்களை எல்லா நாட்களிலும் திறக்கக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடைபெற்றது.