இனிமேல் ஜல்லிக்கட்டுக்கு தடை போடுவ..!ராகுல் காந்திக்கு ஜல்லிக்கட்டு பற்றி பாடம் எடுத்த பாஜக நிர்வாகி காளை.!

0
Follow on Google News

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை காண நேற்று மதுரை அவனியாபுரம் வந்த ராகுல் காந்தி, அங்கே சீறி பாய்ந்த காளைகளையும், களத்தில் விளையாடிய தமிழர்களின் வீர விளையாட்டையும் வியப்புடன் பார்த்து மகிழ்ந்தார், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல் காந்தி பார்வையிடுவது இது தான் முதல் முறை என கூறப்படுகிறது, ராகுல் காந்தி பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு சுவாரசிய சம்பவம் நடைபெற்றது.

அவனியாபுரம் கிராமம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் திடலுக்கு ராகுல் காந்தி வந்ததும், அங்கே விழா கமிட்டியின் சார்பில் வரவேற்று இருக்கையில் அமர வைத்தனர், ஏற்கனவே அதே இடத்தில ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினை அழைத்து ராகுல் காந்தி அருகில் அமர வைத்தனர் விழா கமிட்டியினர், இதனை தொடர்ந்து சித்தாலங்குடி கிராமத்தை சேர்ந்த மாடு அவிழ்க்கப்பட்டு அடுத்தடுத்து மாற்றாரு மாடுகள் திறந்துவிடபட்டது இதை அமர்ந்து ராகுல் காந்தி ரசித்து பார்த்து மகிழ்ந்தார்.

இதனை தொடர்ந்து பாஜக மேலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜசேகர் S/O சிவனாண்டி அம்பலம் அவர்களின் காளை திறந்துவிட பட்டது, காளையை அடங்க முயன்ற வீரரை வாடிவாசல் அருகில் குத்தி வீசியதில் மாடு பிடி வீரர் பறந்து விழுந்தார், தொடர்ந்து காளையை சுற்றி வளைத்து அடக்க முயன்ற மாடுபிடிவீரராக்களை ஒரே சுற்றில் பறக்கவிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ராகுல் காந்தியை வியப்பில் ஆழ்த்தியது பாஜக நிர்வாகியின் காளை.

தொடர்ந்து காளை வெளியே செல்லாமல் மீண்டும் ஒரு ரவுண்டு களத்துக்கு திரும்பியதும், உற்சாகத்துடன் ராகுல் காந்தி அமர்ந்திருந்தவர் எழுந்து வியப்புடன் பார்த்தார், இதை விழா கமிட்டியினர் வர்ணனை செய்த போது, ஆக.. அருமை ராகுல் காந்தி எழுந்து பார்க்கிறார், ஆர்வம் என்றால் ஆர்வம்யா.. அவருக்கு தெரியாம போச்சு இல்லையென்றால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையே வந்திருக்காது, இனிமே தடை போட படாது என உறுதியளித்து விட்டார் என்றும்,

மேலும், அவரை இது போன்று அப்பவே அழைத்து வந்திருந்தால் 2006ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையே வந்திருக்காது என விழா கமிட்டியினர் மைக்கில் பேசியது அனைவரையும் கவர்ந்தது, மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பாடம் எடுக்கும் விதத்தில் மதுரை மேலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜசேகர் அவர்களின் தந்தை சிவனாண்டி அம்பலம் அவள்களின் காளையின் விளையாட்டு அடங்கிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.