வாக்கு சீட்டில் முறைகேடு..! சந்தேகத்தை ஏற்படுத்தும் ஊராட்சி தேர்தலின் திமுக வெற்றி..!

0
Follow on Google News

வாக்கு சீட்டு முறைகள் தமிழகத்தில் எப்பொழுதும் சர்ச்சையானவை, இப்பொழுது உள்ளாட்சி தேர்தலிலும் அந்த சந்தேகம் எழுகின்றது, இந்த தேர்தலில் முறைகேடு நடந்தது என உறுதியாக சொல்ல முடியாது ஆனால், முறைகேடு நடக்க பல வாய்ப்புகள் உண்டு. உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தாமல் கட்டம் கட்டமாக பிரித்து நடத்துவதில் ஏகபட்ட சிக்கல் உண்டு, முதலில் அதன் பரபரப்போ கட்டுபாடுகளோ வெளியில் தெரியாது, அங்கு நடக்கும் மோசடியும் இதர சித்து விளையாட்டுக்களும் பார்வைக்கு வராது.

வாக்கு சீட்டில் சில பாதுகாப்பான அம்சங்கள் இருந்தாலும் பெரும் ஓட்டைகளும் உண்டு, குறிப்பாக தேர்தலுக்கு முன்பு அலுவலர் மொத்த வாக்குகளையும் கணித்து வாக்கு சீட்டினை அங்கீகரிப்ப்பார் அதை அத்தோடு விட்டுவிடுவார்கள். பின் என்னாகும் என்றால் வாக்கு எண்ணும் முன் தமிழகத்துக்கே உரித்தான “பலநாயக” வழிகளில் வாக்காளர்கள் செலுத்திய வாக்கு சீட்டுகளை எடுத்துவிட்டு இந்த சீட்டுக்களில் முத்திரை குத்தி உள்ளே போட்டுவிட முடியும். இந்த ஆபத்து உண்டு

இதற்கும் சில பாதுகாப்பு அம்சங்கள் உண்டு என்றாலும் அவை பின்பற்ற சிரமமானவை, கோர்ட்டுக்கு சென்றால் தீர்ப்பு தாமதமாகும். இந்த வாக்காளர் இந்த வேட்பாளருக்குத்தான் வாக்களித்தார் என சொல்லமுடியாதபடி அல்லது தீர்க்கமாக அறிவிக்கமுடியாதபடி பல ஓட்டைகள் உள்ளதால், தில்லுமுல்லுகள் நடக்க வாய்ப்பு அதிகம், எல்லா அரசு அலுவலர்களும் லஞ்சம் வாங்குபவர்கள் அல்ல என்பது போல் எல்லா தேர்தல் அதிகாரிகளும் நேர்மையானவர்கள் என எதிர்பார்க்க முடியாது.

ஒரு வாக்குசாவடிக்கு 10 வாக்குகளை இப்படி மாற்றினால் கூட ஏகபட்ட வாக்குகளை மாற்றமுடியும், ஆளும்கட்சி நடத்தும் தேர்தல்கள் எப்படி இருக்கும் என்பதை முன்பு திருமங்கலம், சாத்தான்குளம் என எங்கெல்லாமோ தமிழகம் கண்டது, அதுதான் தமிழக வழமை, இங்கு உள்ளாட்சி தேர்தல் சந்தேகத்துகுரியவை, இதில் வாக்குசீட்டு முறையும் இன்னும் பலவும் நம்பகதன்மை கொண்டது அல்ல‌

இன்னும் ஒரு பெரும் குழப்பம் என்னவென்றால் சட்டமன்ற பாராளுமன்ற தொகுதிகள் அவ்வப்பொழுது மாற்றபடுகின்றன, ஆனால் உள்ளாட்சி அமைப்புக்கள் 1921ல் மிண்டோ மார்லி பரிந்துரைபடி வெள்ளையன் ஆட்சியில் என்ன நடந்ததோ, அதே வரையறையில்தான் இருக்கின்றன, ஒரு மாற்றமும் பெரிதாக இல்லை பெருகிவிட்ட மக்கள் தொகை, மாறிவிட்ட வாழ்க்கை சூழலில் அதையும் மாற்றியிருக்க வேண்டும் ஆனால் தேசம் அதை செய்யவில்லை

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தொகைக்கு ஏற்ற மறுசீரமைப்பு முதல் வாக்கு சீட்டுக்கு பதில் எந்திரம் வரை பல விஷயங்கள் வேண்டும், அதுவரை இங்கு எதுவும் உண்மையான மக்கள் தீர்ப்பாக கருத முடியாது என்பதே சாமானியன் கருத்து. – ஸ்டான்லி ராஜன் (அரசியல் நிபுணர்)