கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேஷ் உனக்கு வெட்கமா இல்லையா.? வெளுத்து வாங்கிய திருமாறன் ஜி.!

0
Follow on Google News

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று மதுரை வந்துள்ளார். இதையடுத்து அவர் வருவதற்கு முன்பு மதுரை மாநகராட்சியின் பணியமைப்புப் பிரிவின் உதவி ஆணையர் சண்முகம் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அந்தச் சுற்றறிக்கையில், அன்னாரின் வருகையை முன்னிட்டு விமானநிலையத்தில் இருந்து அன்னார் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளில்.

சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல், போன்ற பணிகளை செய்திடவும் அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சிப் பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபொறாமல் இருப்பதை கண்காணித்தல். போன்ற பணிகளை கவனித்து வார அனைத்து மாண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையராக அயற்பணியில் பணிபுரிந்து வரும் சண்முகம், துணை ஆட்சியர் என்பவரை 21.07.2021 பிற்பகல் அன்று மதுரை மாநகராட்சி பணியில் இருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது. தனியர் தமது நியமன அலுவலர் முன் ஆஜராக வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்தார்.

இந்த செயலுக்கு தென்னிந்திய பார்வேர்ட் ப்ளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் ஜி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கும் ஆர்.எஸ் .எஸ் தலைவர் மதுரைக்கு வருவதால் அவர் செல்லும் வழிகளை சுத்தமாக வைத்து கொள்ள உத்தரவிட்ட துணை அணையார் மீது உடனே நடவடிக்கை, ஆனால் பிரதமரையும், இந்துக்களையும் இழிவாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

மதுரையை சுத்தமாக வைத்திருந்தால் உங்களுக்கு பிடிக்காத, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க உங்களுக்கு வெட்கமா இல்லையா. ஒரு வட்ட செயலாளர் வீட்டில் விசேஷம் என்றால் கூட அந்த பகுதியை சுத்தமாக வைத்து கொள்ளும் மாநகராட்சி நிர்வாகம், இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கும் ஆர் எஸ் எஸ் தலைவர் வருகைக்காக சுத்தமாக வைத்கொள்வதை உங்களால் பொறுத்து கொள்ள கொள்ள முடியவில்லையா என என மதுரை நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேஷை வெளுத்து வாங்கினார் திருமாறன் ஜி.