கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக தேர்தல் களம் திமுகவுக்கு சாதகமாக இருந்து வந்த நிலையில், தற்போது வெளிவரும் கருத்து கணிப்புகள் திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுக சென்று கொட்டிருப்பதை கருத்து கணிப்புகள் உறுதி செய்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த கிரௌட் விஸ்டன் நடத்திய கருத்து கணிப்புகள் வரும் சட்டமன்ற தேர்தல் களம் அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை கருத்து கணிப்பில் திமுக முன்னிலை பெற்று வந்த நிலையில் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
கிரௌவுட் விஸ்டன் நடத்தும் கருத்து கணிப்புகள் பெரும்பாலனவை சரியானதாகவே கடந்த காலங்களில் இருந்து வந்தது, மற்ற மாநிலக்களில் தேர்தலுக்கு முன்பு நடத்திய கிரௌவுட் விஸ்டன் கருத்து கணிப்பு வெளியிட்டதை உறுதி செய்வது போன்றே அந்தந்த மாநிலங்களில் ஆட்சி அமைந்தது. தொகுதிகளை கணிக்கும் பொழுது மட்டுமே சில குறைகள் வந்தது. அந்த வகையில் கிரௌவுட் விஸ்டன் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து நடத்திய கருத்து கணிப்பு வெளியாகி திமுக கூட்டணியை கதி கலங்க செய்துள்ளது.
திமுக கூட்டணிக்கு 125 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 106 தொகுதிகளும் கிடைக்கும் என் கிரௌவுட் விஸ்டன் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதில் திமுக கூட்டணிக்கு 42.5 சதவீத வாக்குகளும் அதிமுக கூட்டணிக்கு 38.1 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற 52 சதவீத வாக்குகளில் சுமார் 9 சதவீத வாக்குகளை இழந்துள்ளதை இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணி கடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற 31 சதவீத வாக்குகளை விட சுமார் 7 சதவீத வாக்குகள் அதிகரித்துள்ளது. இன்னும் தேர்தலுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் தொடருமா என்று உறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக போன்ற முக்கிய காட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளது, மேலும் மூன்றாவது அணி அமைந்து திமுக வாக்குகள் பிரியும் பட்சத்தில் மேலும் பின்னடைவை திமுக சந்திக்க நேரிடும்.
இரு தினங்களுக்கு முன் கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாய கடனை ரத்து செய்யப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளது, மேலும் தேர்தலுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் தேர்தல் பிரச்சாரங்கள் திமுகவை வீழ்த்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், முதல்வர் நாற்காலி அருகில் சென்ற முக ஸ்டாலினுக்கு அதில் அமர ராஜயோகம் இல்லை என்று பிரபல ஜோதிடர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களை உறுதி படுத்துவது போன்று உள்ளத்து கிரௌவுட் விஸ்டன் கருத்து கணிப்புகள்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .