விஜய் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய திரிஷா… சங்கீதா கோபத்துக்கு இது தான் காரணமா…

0
Follow on Google News

நடிகர் விஜய் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விஜய் நண்பர் சஞ்சய் வீட்டின் மாடியில் தான் கீர்த்தி சுரேஷ் குடியிருப்பதாகவும், அங்கே தான் கீர்த்தி சுரேஷ் கார் நிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் – விஜய் இருவரையும் இணைந்து வைத்து பல கிசு கிசு செய்திகள் தொடர்ந்து வந்தது.

இது ஒரு பக்கம் இருக்க நடிகை திரிஷா – விஜய் இருவரும் ஜோடியாக நார்வே நாட்டில் சுற்றுலா சென்ற புகைபடம் வெளியாகி அடுத்து விஜய் – திரிஷா இருவரையும் இணைந்து வைத்து கிசு கிசு செய்திகள் வெளியானது, இப்படி விஜய்யுடன் இணைத்து கீர்த்தி சுரேஷ் – திரிஷா இருவரையும் வைத்து கிசு கிசு செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கையில், மறுப்பக்கம், விஜய் அவரது மனைவி சங்கீதா இருவரும் பிரிந்தது வாழ்ந்து வருவதாக மற்றொரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஜய் மனைவி சங்கீதாவை விட்டு பிரிய, விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக இருந்தது தான் என்றும், இல்லை த்ரிஷாவுடன் நெருக்கமாக இருந்து வருவதாக தான் என்றும் தொடர்ந்து விவாதம் நடந்தும் அளவுக்கு விஜய் விவகாரம் அனல் பறந்தது, ஆனால் கீர்த்தி சுரேஷ் திருமணதிற்கு பின்பு இதில் கீர்த்தி சுரேஷ் பற்றிய கிசு கிசு செய்திகளுக்கு முற்று புள்ளி வைத்தாலும், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் உடன் திரிஷா ஜோடியாக தனி விமானத்தில் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

எத வகையில் விஜய் மனைவி அவரை விட்டு பிரிய காரணம் திரிஷா என கிசு கிசு வெளி வந்து கொண்டிருக்கையில், இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக விஜயின் மாமாவும், ஒளிப்பதிவாளருமான ஆர். செல்வகுமார் பேட்டி ஒன்றில் பேசுகையில், விஜயின் மகன் அமெரிக்காவிலும், விஜய் மகள் லண்டனிலும் படித்து கொண்டிருப்பதாக கூறிய விஜய் மாமா செல்வகுமார்.

மேலும் ஒரு தாய் இஸ்தானத்தில் உள்ள அம்மா குழந்தையை பார்த்து கொள்வாரா.?அல்லது புருஷனை பார்த்துக் கொள்வாரா? .. புருஷனை பார்த்துக் கொள்வதற்கு ஓராயிரம் பேர் இருக்கிறார்கள்; பிள்ளையை பார்த்துக் கொள்வதற்கு யார் இருக்கிறார்..? அம்மாதான் அவருக்கு எல்லாமுமாக இருக்க வேண்டும்; அதுவும் பெண் குழந்தை வேறு; ஆண் குழந்தைகள் எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்வார்கள்; ஆனால் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கு பாதுகாப்பு என்பது நிச்சயம் வேண்டும் அதனால் பெண் குழந்தை பார்த்து கொள்ள சங்கீதா லண்டனில் இருப்பதாக தெரிவித்தவர்.

விஜய் அவருடைய குடும்பத்துடன் தான் வாழ்ந்து வருகிறார் என தெரிவித்துள்ளார் விஜய் மாமா செல்வகுமார், ஆனால் விஜய் குடும்பத்துடன் தான் வாழ்ந்து வருகிறார் என்றால், கடந்து இரண்டு வருடத்தில் விஜ்யை அவருடைய மனைவி சங்கீதாவுடம் ஏன் பார்க்க முடியவில்லை, என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள், மேலும் விஜய் அவருடைய மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார், நடிகையுடன் கிசு கிசுவில் சிக்கி வரும் நிலையில், ஒரு பொது நிகழ்வில் மனைவி சங்கீதா உடன் கலந்து கொண்டால் இந்த கிசு கிசுக்களுக்கு முற்று புள்ளி வைத்து விடலாம் என்பது விஜய்க்கு தெரியாதா.? என கேள்வி எழுந்துள்ள நிலையில், விஜய் மனைவி அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதால் தான் இந்த பிரச்சனைகளுக்கு விஜயால் முற்று புள்ளி வைக்க முடியவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here