தொடர்ந்து மத ரீதியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த திருமாவளவன் சமீப காலமாக மத ரீதியான எந்த ஒரு சர்ச்சைகளில் சிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் சர்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ள திருமாவளவன், திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று, ஒரு கிருஸ்துவராக இருந்து தான் திருக்குறளை எழுதினார் என்று பேராசிரியர் தெய்வநாயகம் கருத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று.
மேலும் மற்றொரு வீடியோவில், திருமாவளவன், சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து பேசிய சர்சைக்குரிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், சிதம்பரம் நடராஜர் ஒரு காலில் ஆடக்கூடிய அந்த காட்சி என்பது, மயானத்தில் மயானம் என்றால் மரணத்தை குறிக்கின்ற ஒரு குறியீடு, மரணத்தை வென்றவன் என்கிற பொருளில் தான் உயிர்த்தெழுதல் சொல்லப்படுகிறது. உயிர்த்தெழுந்தார் என்றால் மரணத்தை வென்றார் என்று பொருள்.
எனவே, இயேசு பெருமான் ஒற்றைக்காலில் நின்று கூத்தாடுவது என்பது மரணத்தை வென்ற மகிழ்ச்சியை வெற்றியை கொண்டாடுகின்ற ஒரு உருவகம் அதுதான் சிதம்பரத்தின் தலைமை கோவிலாக இருக்கின்றது என சர்ச்சைக்குரிய வகையில் திருமாவளவன் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைராலகி வருகிறது, இந்நிலையில் திருவள்ளுவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருமாவளவனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர், நடிகை கஸ்தூரி மற்றும் காயத்ரி ரகுராம்.
நடிகை கஸ்தூரி இது குறித்து தெரிவித்துள்ளதாவது, திருவள்ளுவர் கிறிஸ்துவராம். அட ! அவ்வையார் ஒரு கன்யாஸ்த்ரீ, பிறை சூடிய பெருமான் என்பதால் சிவன் இஸ்லாமியர், கோவணாண்டி முருகன் சிலுவையில் இடுப்புத்துணியோடு தொங்கிய ஏசுவின் மறுஉருவம் என்று இன்னும் உருட்ட எவ்வளவோ இருக்கே. நான் கடந்த சில மாதங்களாக திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறேன். 100 குறள் மொழிபெயர்த்து உள்ளோம்.
நிறைய வைணவ குறிப்புக்களை காணமுடிகிறது. வேறு எந்த மத தரவும் இதுவரை நான் பார்க்கவில்லை. திருவள்ளுவர் ஒரு இந்து என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதே போன்று பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்ததாவது, திருவள்ளுவர் ஒரு கிறிஸ்துவர், தில்லை நடராஜர் தான் ஏசு என திருமாவளவன் தெரிவித்து வருகிறார், இந்த பொய்களை அறிந்த ஏசு கூட அதிர்ச்சியடைந்து இருப்பார்.
இன்னும் சில நாட்களில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமா தான் ஏசு என்று கூட தெரிவிப்பார்,இது சாத்தியம். இந்த கொடுமைகளை கேட்க தயாராக இருங்க மக்களே என்றும், மேலும் நீட், ஜிஎஸ்டி, டீசல் மற்றும் பெட்ரொல் விலை, இட ஒதுக்கீடு என இதை பற்றி ஏதும் திருமாவளவனுக்கு தெரியாது, அவரது பேச்சுக்கள் எல்லாம் விசித்திரமானது, எங்கோ தவறு நடந்துள்ளது என காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.