நேற்று தான் விஜய்சேதுபதி பேசினார்…இன்று பெரியார் சிலை மீது தாக்குதல்..! காயத்ரி ரகுராம் சொல்லும் காரணம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது, இந்த நிகழ்வின்போது நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில், “நான் கம்யூனிசம் படித்ததில்லை. அது பற்றிய அறிவு எனக்கு அதிகம் கிடையாது. கம்யூனிசத்தை செயல் மூலமும், வாழ்ந்தும் காட்டியவர் ஜனநாதன். கம்யூனிசம், பெரியாரியத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் அதை பின்பற்றி வாழும்போதுதான் அதன் மீது பிடிப்பு ஏற்படும் என விஜய் சேதுபதி நேற்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் செல்லக்கிளி என்பவர் சரணடைந்துள்ளார். பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதாகவும் அவர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். சிலையின் முகம் சிதைக்கப்பட்டும், மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளது,

இந்த நிலையில்,உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர், சிலையை துணியால் மறைத்தனர்.மேலும் சிலையை சேதப்படுத்தியதற்கான காரணம் குறித்து காவல் நிலையத்தில் சரணடைந்த செல்லக்கிளி என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்திற்கு எதிரே உள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னேரியில் பெரியார் சிலை சேதப்படுத்தியது குறித்து கருத்து தெரிவித்துள்ள, பாஜக கலை கலாச்சார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம், நேற்று தான் பெரியார் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார், இன்று பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட இந்த சம்பவம் நடந்துள்ளது. இது ஒரு விளம்பர யுக்தி என தெரிவித்த காயத்ரி ரகுராம், அட போங்கய்யா.. என தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.