நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் இறந்தது விபத்து அல்ல கொலை…வசமாக சிக்கிய கணவன்.!

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண்ணை வேனை விட்டு மோதி கொலை செய்ய உதவிய கணவர். திருவாரூர் மாவட்டம் கிளார்க் கொண்டானை சேர்ந்த சிதம்பரத்தின் மகள் ஜெயபாரதிக்கும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஷ்ணு பிரசாந்த் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் தன் மனைவியையும் உடன் அழைத்து சென்றுள்ளார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நன்றாக சென்ற இவர்களின் வாழ்க்கையில் கருத்து வேறுபாட்டால் 3ஆண்டுகளுக்கு முன்பு மனைவி ஜெயபாரதியும் தனது குழந்தையையும் திருவாரூரில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். தன்னுடைய குழந்தையுடன் ஜெயபாரதி தந்தை வீட்டில் வசித்து வந்தார். ஜெயபாரதி ஆந்தக்குடி என்ற தபால் நிலையத்தில் டெம்ப்ரவரி ஸ்டாப்பாக வேலை பார்த்து வந்தார்.

மே 21 தேதி அன்று வழக்கம் போல மாலை வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனம் வந்து கொண்டிருந்தது, எதிர்பாராத நேரத்தில் ஜெயபாரதி வந்த இருசக்கர வாகனத்தில் எதிரே மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயபாரதி உடனடியாக திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஜெயபாரதி சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விசாரித்து வந்தனர்.

இந்த வேலையில் தான் ஜெயபாரதி தந்தை திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். தனது மகளுக்கு நடந்தது விபத்து அல்ல வெளிநாட்டில் உள்ள அவளது கணவர் தான் திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரித்ததில் வெளிநாட்டில் கணவர் விஷ்ணுபிரசாத் தான் மனைவியை உறவினர்கள் மூலம் இந்த கொலையை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

கைதான ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனத்தின் டிரைவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட ஒருவர் தேடப்பட்டு வருகிறார். தப்பி ஓடியவரை தேடுதல் பணி தீவிரமடைந்து வருகிறது. இறந்துபோன ஜெயபாரதியின் சகோதரர் கார்த்திக் திருமணம் செய்து கொண்ட பெண் சந்தானத்தின் உறவுக்கார பெண் என்பது குறிப்பிடத்தக்கது.