திமுக தலைவர் முதல்வர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். திமுக உடன் பிறப்புகளால், மூன்றாம் கலைஞர், நான்காம் அண்ணா, ஐந்தாம் பெரியார் என கொண்டாடப்பட்டு வருகின்றவர், 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது தன்னை முழு அரசியல்வாதியாக மாற்றி கொண்ட உதயநிதிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் திமுக முக்கிய தலைவர்கள் மத்தியில் குரல் ஒலிக்க திமுக இளைஞரணி செயலாளரானர் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருந்த நிலையில், அமைச்சரவையில் உதயநிதி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இதனை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்து 200 நாட்கள் கடந்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என திமுக முக்கிய அமைச்சர்கள் ஒவொருவராக வழிமொழிந்து வருகின்றனர்.
இந்நிலையில் விரைவில் உதயநிதி அமைச்சரவையில் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடு தான் அமைச்சர்கள் ஒவ்வொருவராக உதயநிதியை வழிமொழிந்து வருவதாக கூறபடுகிறது. இந்நிலையில் எந்த துறைக்கு அமைச்சராகிறார் உதயநிதி என்கிற விவாதம் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், முதல்வர் முக ஸ்டாலினிடம் இருக்கும் முக்கிய துறை உதயநிதிக்கு கொடுக்க படலாம் என கூறப்படுகிறது.
முதல்வர் முக ஸ்டாலின் கைவசம் இருக்கும் பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய துறைகள் முதல்வர் கைவசம் உள்ளது, இதில் இந்திய காவல் பணி, காவல் மற்றும் உள்துறை ஆகிய துறைகள் புதியதாக அமைச்சராக பொறுப்பேற்க்க இருக்கும் உதயநிதிக்கு வழக்கப்படலாம் என கூறப்படுகிறது.
விரைவில் காவல் துறைக்கு அமைச்சாராக இருக்கும் உதயநிதி அதற்கு முன்னோட்டமாக தான் தற்போது அவர் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் திரைக்கு வந்த பின்பு அமைச்சராக பொறுப்பேற்க்க இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தமிழக காவல்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படக்கூடிய துறைக்கு அமைச்சராகிறார் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.