கொரோனா இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் கோரா தாண்டவம் ஆடி வரும் நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய எதிர்கட்சியான அதிமுக வாய் மூடி மௌனமாக இருப்பதின் பிண்ணனி என்ன என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது, சமீபத்தில் தேனி அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம் புகைப்படம் வெளியாகி அனைவரையும் பதபதைக்க வைத்தது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் 650க்கும் மேற்பட்ட படுகைகள் அமைக்கப்பட்டது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தரமான சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை எனவும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கைகளை குறைத்து காண்பிப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன, உயிரிழந்தவர்களின் சடலங்கள் எந்தவித பாதுகாப்பும் இன்றி மரத்தடிகளை அடுக்கி வைக்கப்பட்டிருந்த வீடியோ கடந்த பத்து நாட்களுக்கு முன் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களை எந்தவித பாதுகாப்பும் இன்றி சடலங்களை தூக்கி செல்லும் புகைப்படங்கள் வெளியாகி தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சடலங்கள் ஒரே இடத்தில் குவியல் போல் குவிக்கப்பட்டு, உறவினர்கள் தங்கள் உறவினருடன் சடலம் என்று அடையாளம் காண்பதற்காக ஒரு சடலத்தின் பிளாஸ்டிக் பைகளை பிரித்து முகத்தை அடையாளம் கண்டுபிடித்து அதன் பின்னர் தூக்கி சென்று கொண்டுள்ளனர்.
மேலும் இது போன்று தமிழகம் முழுவதும் பல்வேறு சம்பவங்கள் மனதை உருக்கி வரும் நிலையில் திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அதிமுக மௌனமாக வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறது, சமீபத்தில் கோவை மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் குரல் கொடுத்தார், இது திமுக அரசுக்கு எதிராக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அதே போன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார்.
ஆனால் கேள்வி எழுப்ப வேண்டிய அதிமுக மௌனமாக இருக்கிறது, மேலும் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் உள்ளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக அரசுடன் மெத்தன போக்கை கடைபிடிக்க முயற்சித்து ஆளும் கட்சியால் அவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் எதிர்காலத்தில் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை திரைமறைவில் செய்து வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.