என் கணவருக்கு தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா.? பூமிகா எச்சரித்த அந்த தமிழ் பட இயக்குனர் யார் தெரியுமா.?

0
Follow on Google News

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த நடிகை பூமிகா சாவ்லா பத்ரி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார், முதல் படமே மிக பெரிய வெற்றியை அவருக்கு தேடி தந்தது, அடுத்து அவர் நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம் திரைப்படம் மிக பெரிய வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தது, ஆனால் அவர் தெலுங்க சினிமாவில் செம பிசியாக இருந்தால் தமிழ் சினிமா இருந்து வந்த வாய்ப்புகளை தவிர்த்தார்.

தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்தில் அதிக படம் நடித்த பூமிகா ஹிந்தி படங்களில் நடித்தார், அப்போது இவர் சல்மான்கான் உடன் ஜோடி சேர்ந்து நடித்த தீர நாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதும் ஹிந்தி சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார், நடிகர் சல்மான்கான் நெருக்கிய தோழியாக மாறிய பூமிகா சாவ்லா அவருடன் போது இடங்களில் ஒன்றாக சுற்றி வந்தார், பின் திடிரென தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்தவர் மீண்டும் தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிசியாக இருந்தார்.

2007ம் ஆண்டு தனது நீண்ட நாள் நபரான யோக டீச்சராக இருந்த நபரை திருமணம் செய்த பூமிகா தம்பதிக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி இருந்த பூமிகா அவ்வப்போது சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார், தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மீகா, சதீஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் கண்ணை நம்பாதே திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பூமிகா நடித்து வருகிறார்.

அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி படங்களை பூமிகா வெளியிட்டு வருவதை நோட்டமிட்ட படத்தின் இயக்குனர் படத்தில் காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பீர்களா என கேட்டுள்ளனர், இதற்கு பூமிகா சரி என ஒப்புக் கொண்டுள்ளார், இதனை தொடர்ந்து ரொமான்ஸ் காட்சிகள் பற்றி இயக்குனர் நடிகை பூமிகாவிடம் கதை மற்றும் அந்த காட்சி பற்றி கூறும்போது இதில் முத்த கட்சி இருப்பதை மெல்ல தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட பூமிகா எனக்கு 42 வயது ஆகிவிட்டதால் இந்த வயதில் முத்த காட்சியில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா.? அதனால் முத்த காட்சிகளில் தன்னால் நடிக்க முடியாது என மறுத்துள்ளார், ஆனால் இயக்குனர் வற்புறுத்த கோபப்பட்ட பூமிகா, தற்போது எனக்கு குழந்தை, கனவர் என குடும்பம் உள்ளது இது போன்ற கட்சியில் நடித்தால் எனது கணவருக்கு மிக பெரிய அவமானத்தை நானே பெற்று தந்தது போன்றாகிவிடும் என கடுமையாக எச்சரித்து முத்த கட்சியில் நடிப்பதை திட்டவட்டமாக மறுத்து விட்டார் பூமிகா என கூறப்படுகிறது.