ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான அரசியல் சாசன பிரிவு 370- ஐ ரத்து செய்வதாக, 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடியாக அறிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றாலும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்தார் .
இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தான், காஷ்மீரை ஆக்கிரமிக்க தொடங்கியதை அடுத்து, அங்கு ஆண்ட மன்னர் ஹரிசிங், இந்திய அரசுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார். 1956-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்த்து காரணமாக வெளியுறவு, பாதுகாப்பு உள்ளிட்ட சில முக்கிய துறைகள் தவிர்த்து, மற்ற துறைகளில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள், காஷ்மீரின் சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்ற பின்னரே, அங்கு அமலாகும்.
வெளி மாநிலத்தவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாது. மற்ற மாநிலங்களில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக உள்ள நிலையில், அங்குமட்டும் அது 6 ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார் இதற்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு. லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் , மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து பறிபோன பின்பு காஷ்மீரில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்கலாம். இந்திய எல்லைக்குள் உள்பட்ட மற்ற மாநிலங்கள் போன்றே காஷ்மீரும் கருதப்பட்டு வருகிறது, நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் என்கிற சூழல் கடந்த இரன்டு வருடங்களாக பின்பற்ற படுகிறது.
காஷ்மீரின் எல்லைகள் மாற்றியமைக்கலாம். மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலமும் பிற மாநிலம் போன்று 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது . மேலும், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதால் காவல்துறை, நில அதிகாரம் என்று பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் வந்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டம் நிறைவேற்ற பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகளான நிலையில் காஸ்மீர் மக்களுக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு, அம்மாநிலத்தில் சமூக நீதி காக்கப்பட்டு வருவதாகவும், இட ஒதுக்கீட்டு மூலம் கஷ்மீர் மக்கள் பலன் அடைத்து வருகின்றனர், பயங்கரவாத செயல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த பேராசிரியர்,இந்த வரலாற்று சிறப்பு மிக்க சட்டத்தை அமல் படுத்திய பிரதமர் மோடி மற்றும் உள்த்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றிகளை பேராசிரியர் தெரிவித்து கொண்டார்.