என்கிட்ட எதுக்கு கேக்குற… உன் இஷ்டத்துக்கே செய்… ருதுராஜிடம் டென்ஷனான தோனி… எதுக்கு தெரியுமா.?

0
Follow on Google News

2024 ஐ பி எல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே பல வருடங்களாக சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி இந்த ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், அவருக்கு பதிலாக ருதுராஜ் சென்னை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இப்படியான நிலையில், முதல்முறையாக கேப்டன் பதவியில் பொறுப்பு ஏற்றிருக்கும் ருத்துராஜ், பீல்டிங் அமைப்பது, எந்த ஓவரில் எந்த பவுலர் பவுலிங் வீச வேண்டும் என்பது குறித்து முடிவெடுப்பதில் அவ்வப்போது குழப்பம் அடைந்திருக்கிறார். அந்த சமயத்தில் ருத்ராஜ் ஆலோசனை கேட்டு தோனியின் உதவியை நாடியதாகவும் அதற்கு பதில் சொல்லாமல் தோணி கை விரித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

தோனி இனி கேப்டனாக செயல்பட மாட்டார் என்ற தகவலை அறிந்ததும் சென்னை அணி ரசிகர்கள் கலக்கமடைந்தனர். இருப்பினும், தோனி கிரவுண்டில் களம் இறங்கி விளையாடுவதை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் சென்னை அணி விளையாடும் போட்டிகளை தவறாமல் பார்த்து வருகின்றனர்.தற்போது தோனி சென்னை அணியில் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேன் ஆகவும் விளையாடி வருகிறார்.

இதுகுறித்து முன்னால் சிஎஸ்கே வீரரும் வர்ணனையாளருமான பத்ரிநாத் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம். தோனி சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், ருத்ராஜை அந்த அணியின் கேப்டனாக நியமித்தார்.அப்போது கேப்டனாக பொறுப்பேற்றது குறித்து பேசிய ருத்ராஜ், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றது தனிச்சிறப்பு கொண்டது .

இது எனக்கு கொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்பு. .சிறப்பாக உணர்கிறேன்!அணியில் இருக்கும் வீரர்களை நினைத்து உற்சாகமடைகிறேன். ஏனெனில் அணியில் இருக்கும் அனைவருமே நல்லா அனுபவம் கொண்டவர்கள். அதனால் நான் செய்ய வேண்டியது பெரிதாக எதுவும் இருக்காது. குறிப்பாக தோனி ஜட்டு, அஜிங்கியா ரஹானே உள்ளிட்ட வீரர்களும் அணியில் இருக்கிறார்கள் என்பதை எனக்கு கூடுதல் பலம்.

அதனால் கவலைப்பட பெரிதாக ஒன்றும் இல்லை. இந்தத் தொடரை விளையாட ஆர்வமாக இருக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் பேசி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த போட்டியில் தோனிப்பும் ருத்ராட்சக்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து பத்ரிநாத் பகிர் தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது, “சமீபத்தில் நடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அடுத்த ஓவரில் யாரை பந்து வீச வைக்கலாம் என்று ருத்ராஜ் தோனியிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு தோனி என்னிடம் கேட்காதே என்று பட்டென சொல்லி இருக்கிறார். மேலும் பில்டிங் சம்பந்தமான அட்வைஸ் வேண்டுமென்றால் கேள் நான் சொல்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்..” தோனியின் இந்த நடவடிக்கைக்கு ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், ருத்ராஜ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அணியின் நல்லதுக்காகவும் தான் தோனி அப்படி சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பில்டிங் செய்யும்போது ருதுராஜ்க்கு கை விரலில் Band-aid போட்டு தான் விளையாடி வந்தார். அப்போது சர்துல் தாக்கூர் ஓவரில் பில்டிங் செய்யும் போது ருதுராஜ் பந்தை பிடித்தவுடன் வலியால் துடித்தார். ஏற்கனவே கைவிரலில் ஒட்டப்பட்டிருந்த பேண்டேட்டில் மீண்டும் பந்து பட்டதால் அவருக்கு வலி ஏற்பட்டது. இதனை எடுத்து மருத்துவர்கள் உடனடியாக களத்திற்கு வந்து ருத்ராஜுக்கு சிகிச்சை கொடுத்த நிலையில், அடுத்த போட்டியில் ருதுராஜ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.