கடந்த சனிக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த பின்னர் தோனி பெங்களூர் அணி வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தோனியா அவர் செய்ததற்கு பின்னணியில் உள்ள காரணம் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளது. சென்னை அணியின் முன்னால் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விலகி அந்த அணியில் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேன் ஆகவும் விளையாடி வந்தார்.
இதனால் கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி என்றும் இந்த சீசனுக்கு பிறகு அவர் ஓய்வை அறிவிப்பார் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் தோனியின் ஓய்வு குறித்து இதுவரை சென்னை அணி நிர்வாகமும் தோனியும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இப்படியான நிலையில், சென்னை அணி ரசிகர்கள் பலரும் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று பிராத்தித்து வந்தனர்.
ஆனால், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியுற்றது அந்த அணி வீரர்களை மட்டுமின்றி ஒட்டு மொத்த சென்னை அணி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே சமயம், சென்னை அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற சந்தோஷத்தில் மைதானத்திலேயே விராட் கோலி உட்பட மற்ற பெங்களூரு அணி வீரர்கள் ஆட்டம் பாட்டம் என வெற்றியை கொண்டாடி தீர்த்தனர்.
பொதுவாக போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே அணி வீரர்கள் எல்லாம் ஒன்று கூடி கூச்சலிட்டு ஆரவாரம் செய்து சில நிமிடங்களுக்கு வெற்றியை கொண்டாடுவார்கள். ஆனால், அன்றைய தினம் பெங்களுர் அணி வீரர்கள் நீண்ட நேரமாக மைதானத்தின் மத்தியில் வெற்றியை கொண்டாடினார்கள். அந்த சமயத்தில், சென்னை அணி வீரர்களும் கைகுலுக்கி செல்வதற்காக மைதானத்திலேயே நின்று இருந்தனர்.
அந்த வரிசையில் தோனி முதல் ஆளாக நின்று இருந்தார். ஆனால், பெங்களூரு அணி வீரர்கள் அவர்களை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கொண்டாட்டத்தில் கவனம் செலுத்தி இருக்கின்றனர். இருப்பினும், சில நிமிடங்கள் அங்கேயே பொறுமையாக காத்திருந்த தோனி, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து கைகுலுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்.
வெளியேறி சென்றபோது கூட அங்கே நின்றிருந்த ஆர்சிபி அணியின் உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அவர் கைகுலுக்கிய பின்னரே ஓய்வறைக்கு சென்றுள்ளார். தோனிக்கு முழங்கால் வலி இருப்பதால் ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் அதற்கான முதலுதவி சிகிச்சையை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் போட்டி முடிந்ததும் முதல் ஆளாக கைகுலுக்கி விட்டு முழங்கால் வலிக்கான முதலுதவி சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் என்று மைதானத்தில் தோனி முதல் ஆளாக காத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் ஆர் சி பிரியாணி நீண்ட நேரம் மைதானத்தில் கொண்டாட்டம் செய்து கொண்டிருந்ததால் வலியை பொறுக்க முடியாமல் தோனி அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். ஆனால் இது தெரியாமல் பெங்களூரு அணி ரசிகர்கள் பலரும் தோனி ஆர்சிபிரியை அவமதித்து விட்டதாக கூறி கொந்தளித்து வருகின்றனர்.