சிக்சார் போக வேண்டிய பந்துகளை கேட்சாக மாறும் வகையில் மைதானம் செட்டப்… T20 உலககோப்பையில் இந்தியாவுக்கு வைக்கப்பட்ட ஆப்பு…

0
Follow on Google News

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா கிட்டத்தட்ட சூப்பர் 8 சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. முன்னதாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நியூயார்க் நகரில் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியா வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக அக்சர் படேல் 20, ரிஷப் பண்ட் 43 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதைத் துரத்தியும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் தரமான பந்தயத்தில் அதிரடி காட்ட முடியாமல் திணறினர். அதனால் 20 ஓவரில் பாகிஸ்தான் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்த போட்டி நடந்த மைதானத்தை இரண்டே மாதத்தில் உயர்தர தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்க நாட்டினர் இதை கட்டி முடித்திருக்கிறார்கள். தற்போது இந்த மைதானத்தின் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சுமார் 34,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய, இந்த மைதானத்தில் மொத்தம் எட்டு போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் இந்த மைதானத்தின் ஆடுகளம் டிராப் இன் பிட்ச் ஆடுகளம் ஆகும்.

இப்படிப்பட்ட வகை ஆடுகளம் என்பது வெளியில் தயாரிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெறும் பொழுது கொண்டு வந்து மைதானத்தில் அமைத்துக் கொள்ளும் வகை ஆடுகளம் ஆகும். ஆஸ்திரேலியாவில் இப்படியான ஆடுகளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கிரிக்கெட் விளையாடாத நேரங்களில் மற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

பெரும்பாலும் பந்துவீச்சுக்கு சாதகமாகவும், பேட்டிங் ஆடுபவர்களுக்கு கடும் சவாலானதாகவும் உள்ளது. போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, ஐசிசி அதிகாரப்பூர்வமாக அமெரிக்க மைதானத்தின் தன்மை குறித்தும் , ஆடுகளத்தை கணிக்க முடியாத நிலை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருந்தது. பிட்ச்கள் இன்னும் சரியாக மைதானத்தில் செட்டில் ஆகவில்லை என்றே கூறப்படுகிறது.

இப்படியாக பேட்டிங்கிற்கும், பேட்டிங் பிடிக்கும் வீரர்களின் பாதுகாப்புக்கும் குறைபாடு ஏற்படும் வகையில் உள்ள மைதானத்தின் தன்மை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) , சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ஐசிசி) அதிகாரபூர்வமற்ற புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் இந்த மைதானங்களில் சிக்சர் அடிக்க வீரர்கள் தள்ளாடி வருகின்றனர்.

இந்தியாவின் பவுண்டரி லைன் 50, 60 மீட்டர்களிலேயே தொடங்குகிறது. எனவே இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் மைதானத்தின் பவுண்டரி குறைந்த பட்சம் 70 மீட்டருக்கு மேலாவது வையுங்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாடுகளில் பவுண்டரி லைன் 80 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும்.

எனவே இங்கே பேட்ஸ்மேன்கள் அடிக்கும் சிக்ஸர்கள் அனைத்துமே கேட்ச் ஆக மாறிவிடும். தற்போது டி20 உலக கோப்பையில் நியூயார்க்கில் நடத்தப்படும் போட்டியில் மைதானத்தின் நேராக பவுண்டரி லைன் 70 மீட்டராக அமைக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய கிரிக்கெட் மைதானங்களை விட வெறும் 5 , 10 மீட்டர் தான் அதிகமாக இருக்கும். இதற்கே வீரர்கள் சிக்ஸர் அடிக்கும் முடியாமல் தள்ளாடுகிறார்கள்.