பிரேம்ஜி திருமணத்தை புறக்கணித்த இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா… பின்னணி காரணம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

45 வயதாகியும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக சுற்றி வந்த பிரேம்ஜிக்கு திருமணமானதில் இருந்து வாழ்த்து மழை குவிந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு தமிழ் திரையுலகம் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பிரேம்ஜியை வாழ்த்தினாலும், இசைஞானி இளையராஜாவின் வாழ்த்து மட்டும் பிரேம்ஜிக்கு கிடைக்கவில்லை.

தமிழ் சினிமாவின் இசை சக்கரவர்த்தி என்றால் அது இளையராஜா தான், அவரது தம்பி கங்கை அமரன் இசை, பாடலாசிரியர், கதையாசிரியர், இயக்குனர் என அனைத்து துறையிலும் சிறந்தவர். இவர்களது குடும்பமே சினிமா குடும்பம் எனும் அளவிற்கு சினிமாவில் இவர்கள் கால் வைக்காத இடங்கள் இல்லை என்றும் சொல்லலாம். இப்படிப்பட்ட குடும்பம் தான் தற்போது இரு துருவங்களாக உடைந்து கிடைக்கிறதா என பல கேள்விகள் எழுந்துள்ளது.

பிரேம்ஜி கல்யாணத்தில் இளையராஜாவை காணோம், யுவர் சங்கர் ராஜாவையும் காணோம், அண்ணனை அழைக்கவில்லையா கங்கை அமரன் என்பதுதான் தற்போது விவாதமாகியுள்ளது. 45 வயது வரை திருமணம் ஆகாமல் இருந்த பிரேம்ஜிக்கு திருமணம் என பத்திரிகை ஒன்று இணையத்தில் வைரலானதும், பலரும் அது பொய்யாக தான் இருக்கும் என கூறி வந்தனர், ஆனால் அது உண்மைதான் என வெங்கட் பிரபு உறுதிப்படுத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.

அதேபோல் ஜூன் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் கங்கை அமரன் ,வெங்கட் பிரபு ,சென்னை 28 பட நடிகர்கள் என பலர் முன்னிலையில் திருமணம் நடைபெற்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவத் தொடங்கின. அவ்வாறு பரவிய புகைப்படங்கள் தான் தற்போது பல பூகம்பங்களை கிளப்பியுள்ளது. அனைவரும் புதுமண தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் கங்கை அமரனின் அண்ணனான இளையராஜா திருமணத்தில் கலந்து கொண்டது போல் ஒரு புகைப்படமும் வெளிவரவில்லையே,

அண்ணன் மகன் கல்யாணத்துக்கே இளையராஜா வரவில்லையா, அல்லது கங்கை அமரன் தான் இளையராஜாவை திருமணத்திற்கு அழைக்கவில்லையா என இந்த நிகழ்வு பேசப்படும் பொருளானது. உடனே நமது ரசிகர்கள் இணையத்தில் வைரலான பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழை எடுத்துப் பார்த்து, இதில் கூட கங்கை அமரன் இளையராஜாவின் பெயரை போடவில்லையே, அதனால் தான் இளையராஜா திருமணத்தில் கலந்து கொள்ளவில்லையா என்றும் பல கேள்விகளை அடுக்கினர்.

அதேபோல் இளையராஜா மட்டுமல்லாமல் யுவன் சங்கர் ராஜாவும் இந்த திருமணத்திற்கு செல்லவில்லை. ஆனால் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா Pre wedding நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். என்னதான் இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் பிரச்சனைகள் இருந்தாலும் ,இந்த திருமணத்தில் அவர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்க வேண்டும் என பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வந்த நிலையில்,

இன்னும் சிலர் இளையராஜாவின் மகள் பவதாரணியின் மறைவு இன்னும் அவரை வாட்டி வதைப்பதாகவும், அந்த துக்கத்தில் இருந்தே மீளாததால் தான் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறிவருகின்றனர். அதேபோல் சமீபத்தில் ஜூன் மூன்றாம் தேதி தனது 81 வயதில் அடி எடுத்து வைத்த இளையராஜா தன் மகளின் மறைவால் நான் இந்த பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார்.

மேலும் பலர் இளையராஜா இந்த திருமணத்திற்கு போகவில்லை என்றாலும் யுவன் சங்கர் ராஜா சென்றிருக்கலாம் எனக் கூறி வந்தனர், ஆனால் இந்த திருமணம் திருத்தணி கோவிலில் நடைபெறுகிறது, யுவன் சங்கர் ராஜாவோ இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர், அதனால்தான் அவர் சென்றிருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.